Enable Javscript for better performance
பேல்பூரி- Dinamani

சுடச்சுட

  
  ka3

  கண்டது
  • (சென்னை பல்லவன் குடியிருப்பில் ஒரு கடையின் பெயர்)
  OLD NO.7
  ஜி.இராஜகுரு, சென்னை-41.

  • (சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தின் அருகே இருந்த ஒரு பெட்டிக் கடையில்)
  வீண் அரட்டை வேலையைக் கெடுக்கும்;
  விடாமுயற்சி வெற்றியைக் கொடுக்கும்.
  வி.சீனிவாசன், திருமுல்லைவாயில்.

  • (சிதம்பரத்தில் ஒரு சிற்றுண்டி கடையின் பெயர்)
  ஐந்திணை
  க.கலா, காகிதப்பட்டறை.
  (வேலூர் அல்லாபுரத்தில் ஓர் உணவகத்தின் பெயர்)
  நமக்கு சோறு முக்கியம்
  வெ.இராம்குமார், வேலூர்-1

  கேட்டது
  • (திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணியில் மேட்டுப்பட்டித் தெருவில் இரு பெண்கள்)
  "இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல சேர்த்த உன் பையன் உன்னை எப்பிடிக்
  கூப்புடுறான்?''
  "அதை ஏன் கேக்குறே? என் கணவர் அம்மான்னு கூப்பிடணும்ங்கிறார். நான் மம்மின்னு கூப்பிடச் சொன்னேன். அவன் ரெண்டுக்கும் பொதுவா அம்மின்னு கூப்பிடுறான்''
  ஆதினமிளகி, வீரசிகாமணி.

  • (சென்னை கே.கே.நகர் பஸ் டிப்போ அருகே இளைஞர்கள் இருவர்)
  "என்னடா மொட்டையடிச்சுட்டியா?''
  "இல்லடா, ஹேர் கட்டிங்கே அப்படித்தான்.''
  அ.யாழினி பர்வதம், சென்னை-78.

  எஸ்எம்எஸ்
  பிறர் உன்னை மதிக்கவில்லையே
  என்று வருந்துவதை விட்டுவிட்டு, 
  பலர் உன்னைக் கவனிக்கிறார்கள் என்று
  நினைத்துச் செயல்படு.
  பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

  யோசிக்கிறாங்கப்பா!
  என்னை வெட்டாதீர்கள் மழை தருவேன் என்றது மரம்.
  என்னை வெட்டுங்கள்... மழைநீரைச் சேமிப்பேன் என்றது குளம்.
  சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலி டவுன். 

  அப்படீங்களா!
  மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று குப்பைகளைப் பிரிக்கச் சொல்லி மாநகராட்சி, நகராட்சி, உள்ளூராட்சி என எல்லாரும் வற்புறுத்தினாலும், எல்லாக் குப்பைகளையும் ஒன்றாகப் போடுவதே நமது வழக்கம். சில இடங்களில் தெருக்களில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டிகளில் மக்கும் குப்பைகளைப் போட ஒரு தொட்டியும், மக்காத குப்பைகளைப் போட இன்னொரு தொட்டியும் வைத்திருப்பார்கள். நம் ஆட்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கண்ணை மூடிக் கொண்டு ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில் குப்பையைப் போட்டுவிட்டுச் செல்வார்கள். 
  குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்யும் இடங்களில் இதனால் நிறைய வேலைப்பளு ஏற்பட்டுவிடுகிறது. சொன்னால் கேட்காத மனிதர்களை விட சொன்னபடி நடக்கும் ரோபோக்களை குப்பைகளைப் பொறுக்கச் சொன்னால் என்ன என்று நினைத்தது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட். அது வடிவமைத்துள்ள ரோபோக்கள் இப்போது கூகுள் அலுவலகங்களில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து அதற்குரிய இடத்தில் போட்டுவிடுகிறது. 
  கேமராக்கள், சென்சார்களைப் புலன் உறுப்புகளாகப்பெற்றுள்ள இந்த ரோபோக்கள் 5 அடி உயரம் உள்ளவை. கூகுள் அலுவலகங்களில், காபி டேபிள்களில் உள்ள குப்பைகளைப் பார்த்து, அவற்றின் தன்மையறிந்து தனியாகப் பிரித்து உரிய இடத்தில் போடும் திறனுடைய இந்த ரோபோக்கள் பேட்டரியால் இயங்கக் கூடியவை. 
  நேற்று உள்ளது போலவே இன்றும் குப்பைகள் அதனதன் இடத்தில் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது; கன்னாபின்னாவென்று இருக்கும் அவற்றைச் சரியாகக் கண்டுபிடிக்கும் திறனுடையவையாக இந்த ரோபோக்களை உருவாக்கியிருப்பதுதான் சாதனை.
  என்.ஜே., சென்னை-58.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai