சிரி... சிரி... 

''உங்க கிட்டே கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் ரொம்ப நாளாச்சு''''ஆமாம்... அதுக்கு என்ன இப்ப?''
சிரி... சிரி... 

* ''உங்க கிட்டே கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் ரொம்ப நாளாச்சு''
''ஆமாம்... அதுக்கு என்ன இப்ப?''
''கடன் வாங்கியும் ரொம்ப நாளாச்சுன்னு சொல்ல வந்தேன்''

* ''மன்னர் ஏன் அலறி அடித்தபடி ஓடுகிறார்? போர் நெருங்கிவிட்டதா?''
''பணிப்பெண்ணோடு அவர் செல்ஃபி எடுத்த விஷயம் மகாராணிக்குத் தெரிந்துவிட்டதாம்''
கி.செல்வக்குமரன், திருப்பத்தூர்.

* "தொல்பொருள் ஆராய்ச்சியாளரை 
வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனியே... ஏன்?''
''எங்க வீட்டு ஃபிரிஜ்ஜில் உள்ள பொருட்களின் காலத்தை ஆய்வு செய்யத்தான்''
சு.நாகராஜன், பறக்கை.

* "புதுசா வேலைக்குச் சேர்ந்தவர் திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்''
''ம்... அப்புறம்?''
"நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வைச்சேன்''
எஸ்.மாரிமுத்து, சென்னை-64.

* ''ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு?''
''இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? சொன்னால்தானே விஷயம் என்னன்னு தெரியும்?''
அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

* ''மன்னரை வாழ்த்திப் பாடிய புலவர் 
மேல் மன்னர் ஏன் கோபமாக உள்ளார்?''
"பெட்ரோல், டீசல் விலை போல நாளும் உயர்க உன் புகழ் என வாழ்த்தினாராம்''
உ.சபாநாயகம், சிதம்பரம்.

* ''தண்ணியிலே வாழும் உயிரினம் ரெண்டு சொல்லு''
''எங்கப்பா... மீன்''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி. 

* "வீட்ல ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு தினமும் 
3 வகையான சட்னி கிடைக்குது?''
''அட... எப்படி?''
'' காலையிலே வைச்சது; நேத்து வைச்சது, முந்தாநாள் வைச்சது''
எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com