சுடச்சுட

  kadhir7

  இந்தியாவின்  முதல் செயற்கைகோளுக்கு  "ஆர்யபட்டா'   என  பெயர் சூட்டப்பட்டது. இந்திய  அறிவியல்  மேதையை  கௌரவிக்கவே  இப்பெயர் சூட்டப்பட்டது.  கி.பி. 476-இல்  பிறந்த இவர்,  உலகப்புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரை சந்திரகுப்த மௌரியர் அந்த பல்கலைக்கழகத்துக்கு  முதல்வர் ஆக்கினார்.  தன் 23 வயதில்  எழுதிய  நூல் தான்  ஆர்யபட்டீயம்.  இந்த நூலே  உலகம்  முழுவதும்  விண்வெளி ஆராய்ச்சிக்கு அடித்தளமாக  அமைந்தது.

  ----------------------------------------------

  எஸ்.சடையப்பன்,  காளனம்பட்டி. 

  ----------------------------------------------

  ஜி.டி.நாயுடு  விவசாயத் துறையிலும் பல சாதனைகள்  புரிந்தார்.  இவரது  தாவர ஆராய்ச்சி  முடிவுகள்  உலகையே  பிரமிக்க  வைத்தன.  இவரது  அதிசய  பருத்தி செடிக்கு  "நாயுடு காட்டன்'  என பெயரிட்டு  ஜெர்மன்  கௌரவித்தது.

  ஆர்.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். 

  ----------------------------------------------

   பாரதியார் பாடல்

  ஈரோடு  கேசவலால் காளிதாஸ்  சேட்  காளிதாஸ்  பிலிம் என்ற பெயரில்  1935-இல் "மேனகா'  என்ற படம் எடுத்தார். அதில்தான்  முதன்முதலில்  "வாழ்க  நிரந்தரம், வாழ்க  தமிழ்மொழி'   என்ற பாரதியார்  பாடல் இடம் பெற்றது.

  (புலவர் செ.இராசு எழுதிய "தெரிந்த ஈரோடு தெரியாத  செய்திகள்' என்ற நூலிலிருந்து)

  க.ரவீந்திரன், ஈரோடு
   
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai