திருமணத்துக்கு நாள் இருக்கிறது!

சர்வதேச  போட்டிகளில்  நழுவிக் கொண்டிருந்த தங்கப் பதக்கத்தை   முதல் முறையாக வென்று  சாதனை படைத்திருக்கும்   இறகுப்  பந்தாட்ட  வீராங்கனை  பி. வி. சிந்து  இந்தியாவில்  நம்பர் ஒன்  வீராங்கனையாகிவிட்டார்.
திருமணத்துக்கு நாள் இருக்கிறது!

சர்வதேச  போட்டிகளில்  நழுவிக் கொண்டிருந்த தங்கப் பதக்கத்தை   முதல் முறையாக வென்று  சாதனை படைத்திருக்கும்   இறகுப்  பந்தாட்ட  வீராங்கனை பி.வி. சிந்து இந்தியாவில்  நம்பர் ஒன்  வீராங்கனையாகிவிட்டார். சர்வதேச தர இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இறுதிச் சுற்று வரை ஒன்பதுமுறை சென்றாலும் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் ஒன்றையும் பெற இயலவில்லை. வெள்ளிப் பதக்கங்களுடன் திருப்திப்பட வேண்டிவந்தது. சிந்துவுக்கும் சிந்துவின் ரசிகர்களுக்கும் "தங்கப் பதக்கம்  கிடைக்காதது' ஒரு  மனக்குறையாகவே இருந்தது.

""இறுதி போட்டியின் போது  அதிர்ஷ்டம்  என் பக்கம் இல்லை. அதே சமயம், வெள்ளிப் பதக்கம் சாதாரணமானதும் இல்லை.  எதிராளி திறமையாக ஆடினார்.. அதனால் தங்கப் பதக்கம்  அவரைச் சென்றடைந்தது.''  என்று சொல்லி வந்த சிந்து  பலவித எதிராளிகளின் லாகவத்தை.. சூட்சுமத்தை  மனதில் பதிவு செய்தே வந்திருக்கிறார். அந்த கணிப்புதான்  சிந்துவுக்கு கை கொடுத்திருக்கிறது. 

""தங்கப் பதக்கம்  பெற்ற  வெற்றியை மறக்க முடியாது.  "ஏன் இறுதிச் சுற்றில்  வெற்றி பெறவில்லை' என்ற கேள்வியை சந்தித்து போதும் போதும் என்றாகிவிட்டது.  அந்தக் கேள்வியை எதிர் கொள்ளும் சந்தர்ப்பம்   இனி வராது என்று நம்புகிறேன். அதுவே பெரிய  சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.

"சக போட்டியாளரான  சாய்னா  நேவால்  திருமணம்  செய்து கொண்டுவிட்டார். திருமணம் குறித்து  சிந்து சிந்திக்கத்  தொடங்கியாச்சா'  என்று  அனைவரும் கேட்கிறார்கள். 

சாய்னா திருமணம் செய்து கொண்டுள்ளது சந்தோஷமான விஷயம்தான். ஆனால், இப்போதைக்கு என் திருமணம் பற்றி  யோசிக்கவேயில்லை. எனக்கு வயது இருபத்திமூன்றுதானே ஆகிறது. இன்னும் காலம் நேரம் இருக்கிறது. திருமணத்திற்கு முன்  சாதிக்க வேண்டியதும்  அதிகம் இருக்கிறது. 

இறகுப் பந்தாட்டத்தில்  எனது குருவும் பயிற்சியாளருமான கோபிசந்த்தின் மகள் காயத்ரி  முன்னேறி வருகிறார். காயத்ரிக்கும்  கோபிசந்த்தான் பயிற்சியாளர். கோபி சார் எங்கள் அனைவரையும் அவரது மகள்களாகத்தான் கருதுகிறார். நடத்துகிறார். பயிற்சி தருகிறாள். காயத்ரியின்  லெவல் வேறு. என்னுடையது வேறு. விளையாட்டில் ஒவ்வொருவருக்கும்  ஒரு ஸ்தானம் கிடைக்கிறது. காயத்ரி இப்போதுதான் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார். வரும் நாட்களில் பிரகாசிப்பார்''  என்று இறகுப் பந்தாட்டத்தில்   புதிய  தலைமுறை பற்றி சிந்து கருத்து சொல்கிறார்.      புதிய  சாதனை நிகழ்த்தியிருக்கும்  சிந்துவுக்கு  இந்திய இறகுப்பந்தாட்ட  சங்கம் பத்து லட்சம் ரூபாய்  பரிசாக வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com