பெங்க் மீலியா!

கம்போடியாவின், அங்கோர்வாட்  கோயிலிருந்து, கிழக்கே  சுமார்  40 கி.மீ. தொலைவில் அடர்ந்த  காட்டினுள்  இந்து கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டது.
பெங்க் மீலியா!

கம்போடியாவின், அங்கோர்வாட்  கோயிலிருந்து, கிழக்கே  சுமார்  40 கி.மீ. தொலைவில் அடர்ந்த  காட்டினுள்  இந்து கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு  உட்படுத்தப்பட்டது.

 12 -ஆம்  நூற்றாண்டில்  இரண்டாம் சூரிய  மன்னனால், கோயில் கட்டப்பட்டிருக்கலாம்.  ஆனால், கவனிப்பாரின்றி, மரங்களால் சூழ்ந்து  பாழ் மண்டபங்களாக  மாற்றியுள்ளன. இருந்தாலும்  இப்போதும், தேவர்களும், அசுரர்களும்  அமிர்தத்திற்காக  கடைந்த  பாற்கடல்  காட்சி,  கருடனில்  விஷ்ணு, ஏழு தலை  நாகம், நாகவழிபாடு  சார்ந்த  சிற்பங்கள்  என பலவற்றை  இங்கு சுவர்களிலும்  தரைகளிலும்  காண முடிகிறது.

தற்போது இந்த இடம்  சுத்தம்  செய்யப்பட்டு,  சுற்றுலாவாசிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.  கட்டணம்  5 டாலர்..  கோயில்  சிப்பந்தியை, கூப்பிட்டுக் கொண்டால், பாழடைந்தவை போக மீதம்  உள்ளதை  அறிவு பூர்வமாக பார்க்கலாம்.  இந்த கோயிலுக்கு  சியாம் ரீப் பகுதியிலிருந்தும்  77கி.மீ. பயணம் செய்து வரலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com