அ‌ந்த 5 பே‌ர்!

தமி‌ழ் திû‌ர​யு​ல​கி‌ல் நடிகை -இய‌க்​கு​ந‌ர் ல‌க்ஷ்மி ராம​கி​ரு‌ஷ்​ண‌ன் வி‌த்​யா​ச​மா​ன‌​வ‌ர். இவ‌ர் பல பட‌ங்​க​ளி‌ல் நடி‌த்​து‌ம்,  நா‌ன்கு பட‌ங்​களை இய‌க்​கி​யு‌ம் இரு‌க்​கி​றார்.
அ‌ந்த 5 பே‌ர்!


தமிழ் திரையுலகில் நடிகை -இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வித்யாசமானவர். இவர் பல படங்களில் நடித்தும்,  நான்கு படங்களை இயக்கியும் இருக்கிறார். அவை “  "ஆரோகணம்'”, “"நெருங்கி வா முத்தமிடாதே'”, "அம்மணி'” மற்றும் சமீபத்தில் வெளியான “"ஹவுஸ் ஓனர்'”. ஒவ்வொரு படமும் இவருக்கு சிறந்த இயக்குநர் என்ற பேரை வாங்கிக் கொடுத்தது. சென்ற வாரம் வெளியான “"ஹவுஸ் ஓனர்' படத்தை இவரது கணவர் தயாரிக்க, இவர் எழுதி இயக்கி உள்ளார். 

இந்தப் படமும் மக்களிடையே நல்ல பெயரை இவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. சந்தோஷமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தால், கோபம், விரக்தி, சோகம், வெறுப்பு என்று பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக இருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.  காரணம் கேட்டதற்கு நம்மிடம் கொட்டித் தீர்த்த விஷயங்கள் இதோ:  

""நல்ல சினிமாவை நான் எடுக்க வேண்டும், அதைப் பார்த்து மக்கள் தங்கள் எண்ணங்களைச் சொல்ல வேண்டும். என்னாலும் ஒரு முழுமையான பொழுது போக்கு (ஸ்ரீர்ம்ம்ங்ழ்ஸ்ரீண்ஹப்) சினிமாவை எடுக்க முடியும். 50 வயதிற்கு மேலான நான்,  இனிமேல் பணத்திற்காகவோ, இல்லை, இந்த சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவோ படம் இயக்க அல்லது படமெடுக்க வரவில்லை. அப்படி என்றால் நான் தொடர்ந்து நடித்திருப்பேன். என் வங்கிக் கணக்கை உயர்த்தி இருப்பேன். நான் ஆத்ம திருப்திக்காகப் படமெடுக்கிறேன். எனக்குத் தெரிந்த நல்ல சினிமாவைக் கொடுத்து, பார்க்கும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். ஓர் இயக்குநரின் பொறுப்பு நல்ல படமாக எடுத்து தயாரிப்பாளரிடம் கொடுப்பது மட்டும்தான். அதை நான் சிறப்பாக செய்கிறேன் என்று படம் பார்த்த பல ஜாம்பவான் இயக்குநர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி, மிஷ்கின்,  தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் என்னிடம் நேரிலும் தொலை பேசியிலும் பாராட்டினார்கள். எனது நண்பர்களும் என்னை பாராட்டாமல் இல்லை. ஆனால் இந்த மாதிரி படத்தை திரை அரங்கில் சில நாட்கள் ஓட விட்டால்தானே மக்கள் பார்க்க முடியும்?

இங்கே தான் அந்த 4-5 பேர்கள் உள்ளனர். இவர்கள் தான் இந்த தமிழ்த் திரையுலகை ஆட்டிப்  படைப்பவர்கள். இவர்கள் சொன்னால் மட்டுமே எந்தப் படமும் ஓடும். இவர்கள் விரும்பவில்லை என்றால், அந்த படம் நல்லதாக இருந்தாலும் சரி, ஓட விடமாட்டார்கள். மக்கள் விருப்பமோ அல்லது புகழ் பெற்றவர்கள் விருப்பமோ இங்கே எடுபடாது. ஙர்ய்ர்ல்ர்ப்ஹ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே,  அதுதான் இங்கு நடக்கிறது. இந்த மாதிரி ஒரு  4-5 பேர்கள் உள்ள கூட்டம் எந்தத் தொழிலுக்கும் சரியல்ல. அதிலும் குறிப்பாக கலைத்துறையான, இந்த சினிமாத்துறைக்கு மிகவும் ஆபத்து. இது தொடர்ந்து நீடித்தால் தமிழ்த் திரையுலகம் எங்கு போய்ச் சேருமோ என்று தெரியவில்லை. 

இந்த நிலையில் தயாரிப்பு - விநியோகம் இரண்டும் கொண்ட அஎந நிறுவனம் "ஹவுஸ் ஓனர்' படத்தை வெளியிட்டது மிகவும் பெரிய விஷயம். அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்''  என்றார் இயக்குநர்  லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com