புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார். நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக இருக்கிறது
புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார். நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்துவிட்டதைப் போல காணப்படுவார்கள். சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி, அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது. காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:
ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது? எவ்வளவு குடித்தால் அதிகமானது?
காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும். தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம். அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும். 
காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?
காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப் போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை 
* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்
போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. 
அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?
காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை. காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கிவிடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு, அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன் விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும் எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான பிரச்னைகள் வரக்கூடும். வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும். 
ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்? அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும். நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால், அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர் அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும். இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும் காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும். காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள் ஆகியவற்றிலும் வருகிறது. 
அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில் இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?
ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது. அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே புத்திசாலித்
தனமாக காபியைக் குடியுங்கள். அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத் தவிருங்கள்.
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com