மைக்ரோ கதை

அந்த ஆசிரமத்தில் குருவிடம் உபதேசம் கேட்க வருபவர்களிடம் எல்லாம் குரு அங்கிருக்கும் மண்பானையைக் காட்டி, "மண் பானையைப் போல இருப்பாயாக' என்று சொன்னார்
மைக்ரோ கதை

அந்த ஆசிரமத்தில் குருவிடம் உபதேசம் கேட்க வருபவர்களிடம் எல்லாம் குரு அங்கிருக்கும் மண்பானையைக் காட்டி, "மண் பானையைப் போல இருப்பாயாக' என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் யாரும் அவரிடம் விளக்கம் கேட்கத் துணியவில்லை.
ஒரே ஒரு சீடன் மட்டும் குருவிடம் விளக்கம் கேட்டான்.
அதற்கு குரு சொன்னார்:
"மண்பானை மண்ணிலிருந்து வந்தது. அது உடைந்து போனால் மண்ணுக்கே திரும்பப் போய்விடும் என்று அதற்குத் தெரியும். அதனால் அதற்கு எந்த அகம்பாவமும் இல்லை. வெளியில் எவ்வளவு வெயில் அடித்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் குளிர்ச்சியாக இருக்கிறது. அகம்பாவம் இல்லாமல், கோபப்படாமல், எரிச்சலடையாமல் மண்பானை போல இரு என்பதைத்தான் சுருக்கமாக அப்படிச் சொன்னேன்''
இளவல் ஹரிஹரன், மதுரை-12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com