பேல்பூரி

சொந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் செல்லாமலேயே தொலைதூரக்கிராமப்புறங்களில் பலருடைய வாழ்க்கை முடிந்து விடுகிறது.
பேல்பூரி

கண்டது
• (மன்னார்குடி பந்தலடிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில்)
நான் திமிர் பிடித்தவன் இல்லை!
அந்த திமிருக்கே பிடித்தவன்!
எச்.மோகன், மன்னார்குடி.

• (முசிறி - நாமக்கல் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வேனில்)
செயல் என்பதே சொல்
ஆர்.தனம், திருச்சி-2

• (மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே ஒரு பூஜை பொருட்கள் விற்கும் கடையின் பெயர்)
வாத்தியார் கடை
இசைவாணி, நெல்லை-2

• (சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்)
உப்பு - மிளகு
வெ.அப்பாவு, திண்டுக்கல்-1

கேட்டது
• (நெய்வேலி மெயின் பஜார் டீக்கடையில்)
"மாஸ்டர் என் ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க''
"சந்தோசம்''
"வழக்கமா டீ போடுவீங்களே...''
"ஆமாம்''
"அந்த மாதிரி இல்லாம நல்லா நாலு டீ போடுங்க'' 
கி.ரவிக்குமார், நெய்வேலி-3.

• (கம்பைநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 5- ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும், அவனுடைய ஆசிரியரும்)
"சார் என் தலையிலே எறும்பு ஏறுது பாருங்க சார்''
" அதை ஏன்டா என்னைப் பார்க்கச் சொல்றே?''
"நீங்கதானே சார் என் மண்டையில் எதுவும் ஏறாதுன்னு சொன்னீங்க?''
ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.

யோசிக்கிறாங்கப்பா!
இன்று பலரின் திருமணத் தேதியை 
நிர்ணயிக்கிறது திருமண மண்டபங்கள் 
இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்
இருக்கிறான் என்று பார்க்க வருபவர்களும் உண்டு;
இருக்கிறானே என்று பார்க்க வருபவர்களும் உண்டு.
சத்தியன், கிழவன்ஏரி.

அப்படீங்களா!
சொந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்குச் செல்லாமலேயே தொலைதூரக்கிராமப்புறங்களில் பலருடைய வாழ்க்கை முடிந்து விடுகிறது. இன்னொருபுறத்திலோ உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். உலகத்தைத் தாண்டி வேற்றுக்கிரகங்களுக்குச் சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். 
இந்த நிறுவனம் 2022- இல் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ராக்கெட்டை அனுப்ப உள்ளது. அதன் பிறகு 2024-இல் மனிதர்களை ஏற்றிக் கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் புறப்பட உள்ளது. "அதற்கான டிக்கெட்டை இப்போதே பதிவு செய்து கொள்ளலாம்'' என்கிறார் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த எலான் மஸ்க். 
"டிக்கெட் விலை 5 லட்சம் டாலர். அங்கே சென்ற பிறகு தங்கும் செலவு தனி. அதற்கு இன்னொரு 5 லட்சம் டாலர் தேவைப்படும்'' என்கிறார்.
என்.ஜே., சென்னை-116.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com