சுடச்சுட

  
  kadhir14

  ""நீதான் இந்த வீட்ல தினமும் தண்ணியடிக்கிறியா?
  உனக்கு  இலவசமா ஒரு சிகிச்சை தரப்போறேன். அப்புறம் உன்னால
  தண்ணியடிக்க முடியாது''
  ""அப்புறம் யார் சார் தண்ணியடிச்சுச் செடிக்கு எல்லாம் தண்ணி ஊத்துறது?''

   

  ""உங்க வீட்டுல வாஷிங் மெஷின் இருக்கா? என்ன மேக்? எப்ப வாங்கினது?''
  ""என்னங்க... உங்களை யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க... 
  பாத்ரூமை விட்டு  வெளியே வர்றீங்களா?''

   

  ""ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே... ஏதாவது மாற்றம் தெரியுதா?''
  ""ஒரு மாற்றமும் இல்லே... இன்னிக்கும் அதே 12 கட்டங்களாகத்தான் இருக்கு''

   

  ""மனைவி ஊருக்குப் போயிருக்கிறதா சொன்னீங்க... திட்டுற சத்தம் கேட்குது''
  ""ஏற்கெனவே பதிவு செஞ்சதுதான்...
  பழக்க தோஷம். கேட்கலைன்னா வேலையே ஓட மாட்டேங்குது''

  என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-93.


  டாக்டர்:  உங்களுக்கு நடுக்கம் எப்போது இருந்து?
  நோயாளி:  கல்யாண தேதி சரியாக நினைவு இல்லை டாக்டர்


  மேனேஜர்:  பெர்சனல் லோன் கேக்குறீங்களே... எதுக்குன்னு
  சொல்ல முடியுமா?
  பணியாளர்:  அதுதான் பெர்சனல் லோன் ஆச்சே  சார்...
  எப்படிச் சொல்ல முடியும்? 

   டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

  ""அந்த அடகுக் கடைக்காரர்  செல்லாத நோட்டுகளைக்  கொடுத்து என்னை ஏமாத்திட்டாரு''
  ""என்ன அடகு வைச்சே?''
  ""கவரிங் நகைகளை''

  ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.


  "" டாக்டர் இன்னிக்கு
   ரெண்டு ஊசி போடுறீங்களே... எதுக்கு?''
  ""இன்னிக்கு 1+1 ஆஃபர். அதான்''

  பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai