சுடச்சுட

  
  kadhir9

   

  ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். "தேஸôப்' படத்துக்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் "தேஸôப்' படத்தில்தான் இவர் பிரபலம் ஆனார். அந்த படத்தில் இடம் பெற்ற "ஏக் தோ தீன்..' பாடல் இவரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. அதே படத்தில் அனில் கபூர் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த ஜோடியும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் தொடர்ந்து இருவரும் பல படங்களில் ஜோடியாக நடித்தனர். 20 படங்களுக்கு மேல் இவர்கள் சேர்ந்து நடித்திருந்தனர். பின்னர் திருமணமாகி மாதுரி சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் அனில் கபூர் ஜோடியாக அவர் நடிக்கிறார். "டோட்டல் தமால்' என்ற காமெடி படத்தில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் மற்றொரு கதாநாயகனாக அனில் கபூரும் அவருக்கு ஜோடியாக மாதுரியும் நடிக்கிறார்கள். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில்  அனில் - மாதுரி இணைந்து பங்கேற்பார்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

  -----------------------

  தமிழில் "கனா கண்டேன்', "பாரிஜாதம்', "மொழி' , "அபியும் நானும்', "ராவணன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ப்ரித்திவி ராஜ். பாடகர் , தயாரிப்பாளர் என  பன்முகம் கொண்ட இவர் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படத்துக்கு "லூசிஃபெர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் மோகன்லால்  இப்படத்தைத் தயாரிக்கிறார்.  மஞ்சு வாரியார், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய் , சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன் ஆகியோருடன் பிரித்விராஜ்  கௌரவ  வேடத்தில்  நடிக்கிறார். 

  முரளி கோபி  கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். "புலிமுருகன்' படத்திற்கு வசனம் எழுதிய ஆர்.பி.பாலா வசனம் எழுதுகிறார்.  சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.  தமிழில் "சாதுமிரண்டா' படத்திற்கு இசையமைத்த தீபக் தேவ்   இசையமைக்கிறார், சம்ஜித் முஹமது படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கலை  இயக்கம் மோகன் தாஸ்.  தமிழ், மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.  எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் அரசியல் கதையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.   

  -----------------------

  தேவ் படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

  "கைதி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இடையே  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தில் சீனியர் நடிகைக்கான கதாபாத்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மஞ்சு வாரியார், நதியா, அர்ச்சனா உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்த முக்கியமான  கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஜோதிகாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணிகள் முடிந்த பின் விரைவில் படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீத்து ஜோசப் தமிழில் "பாபநாசம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  -----------------------

  இணையதளங்களில் தங்களது கருத்து மற்றும் புகைப்படங்களை பகிர்வதில் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகைகள் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு தங்களது ஃபாலோயர்  எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் தங்களது கவர்ச்சிப் படங்களை வெளியிடுகிறார்கள்.  காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கும் இடையே கடந்த சில மாதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும்போட்டி நிகழ்ந்து வருகிறது. இருவரும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் தினம் வெளியிடுகின்றனர். சுட்டுரைப்  பக்கத்தில் தவறாமல் ஏதாவது ஒன்றிரண்டு தகவல்களையும் பதிவிடுகிறார்கள். சில தினங்களாக இந்தப் போட்டி அதிகரித்துவருகிறது. சமந்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களும், சுட்டுரைப்  பக்கத்தில் 73 லட்சம் ஃபாலோயர்களும் உள்ளனர். காஜலுக்கு சுட்டுரையில் 20 லட்சம் ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் 90 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை கூட்டத்தான் இருவருக்குள்ளும் தற்போது இணைய தள மோதல் நடந்து வருகிறதாம். 

  -----------------------

  கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "கடாரம் கொண்டான்'. "தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இப்படத்தை எழுதி இயக்குகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தோடு   ட்ரைடென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.  கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.  தற்போது படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்து  இறுதிகட்டப் பணிகளில் படக்குழு  கவனம் செலுத்தி வருகிறது.

  சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் தனது சுட்டுரைப் பக்கத்தில் விக்ரம்  ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். ""பன்முகத் திறமைகொண்ட விக்ரம் சாருடன் பாடல் பதிவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. முழு உற்சாகத்துடன் இந்தப் பாடலை அவர் பாடினார். உத்வேகத்தை அளிக்கக் கூடிய பாடலாக இது இருக்கும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai