பேல்பூரி

சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்வது சாதாரணமாகிவிட்டது. தண்டவாளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின் இணைப்புகள் மூலம் மின்சாரத்தைப் பெற்று இந்த ரயில்கள் ஓடுகின்றன.
பேல்பூரி

கண்டது
• (மயிலாடுதுறை பேருந்துநிலையத்தில் தனியார் பேருந்தின் உள்ளே கண்ட வாசகம்)
ATM  - எப்பவும் டிக்கெட்டை மறக்காதீர்
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

• (மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு கடையின் பெயர்)
மழைதுளி - மலிவுவிலை கடை
எஸ்.ஜெயந்தி, மயிலாடுதுறை.

• (கோவை இராமநாதபுரத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
அம்மாயி வீடு
எஸ்.டேனியல் ஜூலியட், கோயம்புத்தூர்-45.

• (திண்டுக்கல் டவுன் கடை ஒன்றில் கண்ட வாசகம்)
எப்படிப் போனேனோ
அப்படியே திரும்பி வந்துட்டேன்-
துணிப்பை.
எம்.பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்-1

யோசிக்கிறாங்கப்பா!
கோபம் - 
நீயே உனக்குக் கொடுத்துக் கொள்ளும்
தண்டனை.
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

கேட்டது
• (திருச்சி சங்கரன் பிள்ளை ரோடு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு தம்பதியினர்)
"என்னங்க நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு நம்ம மேல எவ்வளவு அக்கறை பாருங்க. வாடகைக்கு வேறு வீடு கிடைக்காம நாம அலைஞ்சுக்கிட்டு இருக்கிறோம்னு 3 வாடகை வீட்டைக் கண்டுபிடிச்சு சொல்லி இருக்காரே''
"அட... நீ வேற... இந்த இடத்தைவிட்டு நம்மளைக் காலி பண்றதுக்கு அந்த ஆளு துடியா துடிக்கிறாரு. அது தெரியாம பேசிக்கிட்டிருக்க''
எஸ்.சிவா, திருச்சி-2.

• (நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் தோடர்களின் குடியிருப்பில் இரண்டு சுற்றுலா பயணிகள்)
"நான் சைகையிலே பேசுறதை அவுங்க நல்லா
புரிஞ்சுக்கிறாங்களே?''
"எல்லா மிருகங்களுடைய பாஷைகளும்
அவுங்களுக்கு நல்லா புரியும்''
மு.தாஜுதீன், தஞ்சாவூர்.

எஸ்எம்எஸ்
பிடிவாதங்களை விட்டுப் பாருங்கள்...
உங்களுக்குப் பிடித்தவர்கள்
எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள்.
சோம.தேவராசன், கும்பகோணம்.

அப்படீங்களா!
சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்வது சாதாரணமாகிவிட்டது. தண்டவாளத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மின் இணைப்புகள் மூலம் மின்சாரத்தைப் பெற்று இந்த ரயில்கள் ஓடுகின்றன. மின்சார ரயில்களுக்கு முன்பு இருந்த டீஸல் என்ஜின் ரயில்களாகட்டும், அதற்கு முன்பு நிலக்கரியை எரித்து அதன் வெப்பத்தில் உருவாகக் கூடிய நீராவியைப் பயன்படுத்தி ஓடும் நீராவி என்ஜின்களாகட்டும் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தன. 
ஜெர்மனியில் ஃப்ராங்ஃபர்ட் நகரில் இப்போது சரக்கு வாகனங்களை மின்சாரத்தில் இயக்கப் போகிறார்கள். அதற்காக மின்வழிப் பாதையை அமைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஓடக் கூடிய சரக்கு வாகனங்களில் மூன்றில் ஒரு பகுதியை மின்சாரத்தில் இயக்கினாலேயே 6 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுவது குறையுமாம். 
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com