Enable Javscript for better performance
ஏக்கத்தில் இலியானா!- Dinamani

சுடச்சுட

    
    ilena

    நடிகை இலியானா வெளிநாட்டு நண்பர் ஆண்ட்ரு நிபோன் உடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் "லிவிங் டு கெதர்' பாணியில் வாழ்ந்தனர். இதனால் இலியானாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து ஆண்ட்ருவுடனான காதலை முறித்துக் கொண்டதுடன் அவரை விட்டுப் பிரிந்தார். காதல் முறிந்து சில மாதங்கள் ஆகியும் பெரிதாக  பட வாய்ப்புகள் இலியானாவுக்கு வரவில்லை. இந்த நிலையில் இலியானா காதல் பிரிவில் வாடிக் கொண்டிருக்கிறார். தனிமையில் அவர் இருக்கும் நேரங்களில் காதலன் நினைவு அவரை வாட்டுகிறதாம். சமீபத்தில் வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்தவருக்கு எங்கேயோ ஒலித்த காதல் பாடல் ஒன்று காதில் விழ அதைக் கேட்டு மெய்மறந்து நின்றார். 

    தனது நிலையை புகைப்படமாக இணையத்தில் வெளியிட்ட இலியானா கூடவே ஒரு  குறுந்தகவலைப் பகிர்ந்தார். "காதல்  பாடல்களைக் கேட்டு, ஒரு மியூசிக் வீடியோவில் என்னைக் கற்பனை செய்து கொண்டிருக்கும்போது நான் ஜன்னலுக்கு வெளியே விவேகமாகப் பார்க்கிறேன்' என்று தனக்கு புரிந்த காதல் மொழியில் தனது நிலையை உணர்த்தியிருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai