இரும்புத்திரை 2

"விக்ரம் வேதா', "நேர்கொண்ட பார்வை', "இவன் தந்திரன்' போன்ற படங்களில் நடித்திருப்பதுடன், தற்போது "இரும்புத்திரை 2'ஆம் பாகத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இரும்புத்திரை 2

"விக்ரம் வேதா', "நேர்கொண்ட பார்வை', "இவன் தந்திரன்' போன்ற படங்களில் நடித்திருப்பதுடன், தற்போது "இரும்புத்திரை 2'ஆம் பாகத்தில் நடிக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பருமனாக இருக்கும் படம், ஸ்லிம்மாக இருக்கும் படம் என இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசும் போது... ""2014-ஆம் ஆண்டு சட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு படித்தபடி ஒரு வேலையும் செய்து கொண்டிருந்தேன். நல்ல வருமானம், மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் காரணமாக உணவு, உடை, படங்கள் என அதிக நேரம் செலவிட்டேன். அது எனக்கு உடல் பருமனை அளித்தது. 

பின்னர்தான் விஷயம் புரிந்தது. ஜிம்மிற்கு சென்றேன்.  40 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஓடி உடல் எடையைக் குறைத்தேன். சில வருடங்கள் கழித்து 18 கிலோ எடை குறைவாக இருந்தேன். பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை இப்படி மாற்றியது. 

அழகு என்பதற்கான எல்லை எதுவும் இல்லை. உங்கள் மனதிற்காகவும், உங்கள் எடையை தாங்கி நிற்கும் கால் மூட்டிற்காகவும் உடற்பயிற்சி செய்யுங்கள். மற்ற எதற்காகவும் அல்ல'' என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com