கயானா நாட்டில்  தமிழ் பிரதமர்!

தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். சிலர் அந்த நாடுகளில் உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள்.
கயானா நாட்டில்  தமிழ் பிரதமர்!

தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். சிலர் அந்த நாடுகளில் உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். அவர்களில்  ஒருவர்தான் மோசஸ் நாகமுத்து. இவர் கயானா நாட்டின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர்.   இந்த நாட்டின் முதல் தமிழ் பிரதமர் இவர்தான். 

அது சரி கயானா  நாடு எங்கே இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு சிறிய குறிப்பு.   கயானா கூட்டுறவுக் குடியரசு (இர்-ர்ல்ங்ழ்ஹற்ண்ஸ்ங் தங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச் என்ஹ்ஹய்ஹ)என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ளது. 

இந்த நாட்டின் எல்லை என்று பார்த்தால், கிழக்கில் சுரிநாம் என்ற நாடும், மேற்கில் வெனிசுலாவும், வடக்கில் அட்லாண்டிக் சமுத்திரமும், தெற்கு மற்றும் தென்மேற்கில் பிரேசில் நாடும் இருக்கிறது. 

இந்த நாடு 215,000 சதுர கி.மீ.  பரப்பளவு கொண்டது. தென் அமெரிக்காவின் மூன்றாவது சிறிய நாடு இது. மற்ற இரண்டு நாடுகள் உருகுவே மற்றும் சுரினாம். இந்த நாட்டின் தலை நகரம் ஜார்ஜ் டவுன். இதன் ஜனத்தொகை  2016 நிலவரப்படி 783,769.

நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக் கொடிவழித் தமிழ் குடும்பம் ஒன்றில் விம் என்ற ஊரில் பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகை யாளராகவும் பணியாற்றிய இவர், பின்னர் வழக்கறிஞர் தொழிலும் செய்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளராக மாறி, 2001 -ஆம் ஆண்டில்  ஏங்ய்க்ழ்ங்ங்’ள் இன்ழ்ங் என்ற புதினத்தை எழுதி வெளியிட்டார். 1950-களிலும், 1960-களிலும் விம் கிராமத்தில் குடிபுகுந்த மதராஸ் மீனவர்களின் வாழ்க்கையை விளக்கும் புதினமாக அது இன்றும் மக்கள் பாராட்டும் படி இருக்கிறது. 

1964-ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1992 -ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார்பில் கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார். இன்று இவர் முதல் தமிழ் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர். 

எப்படி இந்த நிலைக்கு நீங்கள் வந்தீர்கள்?’’ என்று கேட்டால், ""நான் என்றும் மக்களுடனேயே இருக்கிறேன் அவர்கள் நடுவிலேயே வாழ்கிறேன். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிறேன். அவர்களுக்கு என்ன தேவை என்று எனக்கு நன்றாகவே தெரியும். என்னைப் பொருத்தவரை இளைஞர்களுக்கு இந்த ஆட்சியில் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நான் கண்டிப்பாக சொல்வேன். பல்வேறு நாடுகளில் உள்ள ண்ய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் டெக்னாலஜி சம்பந்தமாக பல விசயங்களைக் கற்றுத் தேர்ந்து உயர்ந்திட, பல நாட்டினருடன் இந்த அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கூடிய சீக்கிரம் அதன் விவரங்கள் வெளி வரும். 

என்னைப் பொருத்தவரை “நான் தமிழன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். தமிழ் தான் உலகிலேயே முதன் மொழி என்று நிரூபணமாகி விட்டது. தொன்மையான மொழி. எனது மூதாதையர்களைப் பற்றிய விவரங்களை நான் தமிழ்நாட்டிற்குச் சென்று கண்டுபிடிக்க ஆசைப்படுகிறேன். அதுவும் சீக்கிரமே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com