பேல்பூரி

பட்டுப்பூச்சி மெடிக்கல்ஸ்
பேல்பூரி

கண்டது

(மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையின் பெயர்)

பட்டுப்பூச்சி மெடிக்கல்ஸ்

ஆர்.வி.கணேஷ், மதுரை-20

(சென்னை அண்ணா நகரில் ஓர் இளநீர் கடையில்)

இளநீரின் நன்மைகள்:

  • சிறந்த இயற்கை குளிர்பானம்
  • பொட்டாசியம், சோடியம் நிறைந்தது.
  • உடல் நீர் வறட்சியைத் தவிர்க்கும்.
  • வயிற்றுப் புண்ணைப் போக்கும்.
  • கொழுப்பைக் குறைக்கும்.

பி.பழநி, சென்னை-50

(கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையில் ஒரு
பேக்கரியின் பெயர்)

MONKEYS BAKERY

கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூரு-36

எஸ்.எம்.எஸ்.


காதல் என்பது ரோட்டில கிடக்கிற ரூபாய் மாதிரி...
தொலைத்தவன் காலியாவான்...
கிடைத்தவன் ஜாலியாவான்.

நெ.இராமன், சென்னை-74.

கேட்டது


(நாகர்கோவில் - மதுரை செல்லும் பேருந்தில்பயணியும் ஓட்டுநரும்)

""டிரைவர் சார்... அரசு விரைவுப் பேருந்துன்னு போட்டிருக்கீங்க... ஆனா வண்டியை உருட்டிக்கிட்டே போறீங்க... பேசாமநகர்வுப் பேருந்துன்னு போட்டுறவேண்டியதுதானே?''
""போட்டுறலாம்... ஆனால் அதை நான் போடமுடியாது... அரசுதான் போடணும்''

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

(சென்னை அசோக் நகரில் உள்ள உணவக வாசலில் இரு நண்பர்கள்)

""கடன் அன்பை முறிக்கும்ங்குறது உனக்குத் தெரியும் இல்ல... அப்புறம் எதுக்கு கடன் கேட்குற?''
""கடன், கிடன் இப்படி எதுவுமில்லாமல் வெறும் அன்பை வச்சக்கிட்டு நாக்கை வழிக்கிறதுக்கா நாம பழகுறோம்?''

எம்.கருணாகரன், சென்னை-15.


மைக்ரோ கதை


பூங்காவில் ரகுவும் ரவியும் உட்கார்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பூங்காவிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர் அவர்கள். அப்போது ஒரு பிச்சைக்காரர் வந்து
கையேந்தினார்.

""பத்துப் பைசா கூட இல்லை... போ.. போ...'' என்று விரட்டினான் ரகு. பிச்சைக்காரர், ""பத்துப் பைசா கூட இல்லியா? அட பாவமே... என் கூட வாங்க பிச்சையெடுக்கலாம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் கோபப்படாமல். ரகுவுக்கு கோபம் வந்தது. அவமானமாகவும் இருந்தது.

""ஏதாவது காசு போட்டிருக்கலாம். பிச்சைக்காரர் கூட நம்மளை மதிக்கலை பாரு'' என்றான் ரவி.

ஒரு வாரம் சென்றது. ரகுவும் ரவியும் பூங்காவில். அதே பிச்சைக்காரர் கையேந்தினார். ரகு உடனே பத்து ரூபாய் போட்டான்.

பிச்சைக்காரர் சொன்னார்:

""என்னை மாதிரி ஆளுக்கெல்லாம் பத்து ரூபாய் போட்டீங்கன்னா... சீக்கிரமே என்னை மாதிரி நீங்களும் ஆயிடுவீங்க''

செல்.பச்சமுத்து, சென்னை-24.

யோசிக்கிறாங்கப்பா!


நாம் கொசுக்களோடு மட்டும்தான் போராட்டம் நடத்துகிறோம்.
சாக்கடைகளோடு நமக்கு எப்போதுமே சமாதானம்தான்.

சு.நாகராஜன், பறக்கை.


அப்படீங்களா!

தூக்கம் கண்களைத் தழுவினாலும் ஆழ்ந்த தூக்கம் பெரும்பாலானவர்களுக்கு இல்லாமற் போய்விட்டது. மனதில் உள்ள ஏகப்பட்ட பிரச்னைகள் தூக்கத்திற்கு எதிராக ஒரு புறம் போர் நடத்தினால், தூங்கும் இடத்தைச் சுற்றியிருக்கிற வெளிச்சம் ஆழ்ந்த தூக்கத்தின் இன்னோர் எதிரியாகிவிடுகிறது.

முகமூடி போல "கண்மூடி' ஒன்று இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்மூடியை அணிந்து கொண்டு படுத்தால் சுற்றிலும் உள்ள ஒளி இமைகளுக்குள் ஊடுருவி தூங்குவதற்குத் தொல்லை எதுவும் தராது. அதாவது கண்களைச் சுற்றிலும் உள்ள ஒளியுடன் போராட்டம் நடத்த வேண்டிய தேவையில்லை என்பதால், கண்களில் உள்ள உணர்வு நரம்புகள் நிம்மதியாகிவிடும். நன்றாகத் தூங்கலாம்.

இந்த கண்மூடிகளை அணியும் போது கண் இமைகளை அழுத்தாமல் இருக்கும்படி இப்போது தயாரிக்கிறார்கள். கண் இமைகள் அழுத்தப்பட்டால் தூக்கம் தொலைந்துவிடும். கண்ணிமைகளின் அசைவுகளைத் தடுக்காத, அதே சமயம் ஒளியை உள்ளே அனுமதிக்காத கண்மூடிகளே தூக்கத்தின் நண்பர்கள். பகல் நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டு செல்ல இந்த கண்மூடிகளைப் பயன்படுத்தலாம். வேலை செய்யும் இடங்களில் உட்கார்ந்து கொண்டே தூங்க நினைப்பவர்களுக்கும் இந்த கண்மூடிகள் உதவும் என்பது கூடுதல் செய்தி. மேனேஜரிடம் மாட்டிக் கொண்டால் அவருக்கும் ஒரு கண்மூடியை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்!

என்.ஜே., சென்னை-58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com