கண்கவர் காட்சிக்கு கோவளம்!

கண்கவர் காட்சிக்கு கோவளம்!

கடல் அலைகள் மண்களை அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்ப்பதுண்டு. இதனால் கரைக்கு கப்பல்கள் வர இயலாமல் போகும்.

கடல் அலைகள் மண்களை அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்ப்பதுண்டு. இதனால் கரைக்கு கப்பல்கள் வர இயலாமல் போகும். கப்பல் மூலம் வரும் சாமான்களை வாங்கி கரைக்கு கொண்டு வர ஏதுவாய் பாலம் அமைப்பது உண்டு. நாகை உட்பட பல இடங்களில் இதுபோன்ற பாலத்தை காணலாம். திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள கோவளம் கடற்கரையில் இந்த பாலம் 214 மீட்டர் தூரத்திற்கு மிக நீளமாய் கட்டப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு தற்பொழுது சுற்றுலாத்தலத்திற்காக மாறிவிட்டது. இதன்மீது ஏறிச்சென்று இறுதிவரை பயணித்து திரும்ப காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அனுமதி உண்டு. ஆனால் ஒருவர், ஒருமணி நேரத்திற்குள் பாலத்தில் நடந்து சென்று திரும்பி விட வேண்டும்.
 - ராஜிராதா,
 பெங்களூரு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com