பேல்பூரி (18/11/2019)

பெங்களூருவில் உள்ளது "இன்டஸ் இன்டர்நேஷனல் பள்ளி'. இந்த பள்ளியில் உள்ள ஓர் ஆசிரியையின் பெயர் EAGLE 2.0. அவர் 7 -ஆம் வகுப்பு, 8 -ஆம் வகுப்பு மற்றும் 9 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
பேல்பூரி (18/11/2019)

கண்டது
* (இராமநாதபுரத்தில் குடிநீர் லாரி ஒன்றின் பின்புறத்தில்)
பூமித்தாய் தந்த சீதனம்...
பூவுலகைக் காக்கும் சாதனம்...
மழை.
சே.தாசன் பீவி, கீழக்கரை.

* (திருவாரூர் மாவட்டம் அன்னதானபுரம் கிராமத்தில் உள்ள கடை ஒன்றின் பெயர்)
ஒற்றுமை விற்பனையகம்
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

* (திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள 
ஓர் உணவகத்தின் பெயர்)
திண்டுக்கல் சமையல்கட்டு
துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

யோசிக்கிறாங்கப்பா!
நம்மால் திருத்தக் கூடிய ஒரே நபர்...
நாம் மட்டும்தான்.
செ.சத்தியசீலன், கிழவன் ஏரி.

கேட்டது
* (மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் வாகன சோதனை செய்யும் இரு போக்குவரத்துக் காவலர்கள்)
"மதிப்புமிக்க நீதிபதி ஐயா தீர்ப்புக் கொடுத்தாலும் கொடுத்தார்... மக்கள் ஹெல்மெட் போடுறாங்களோ... இல்லையோ... நம்மள ஹெல்மெட் போட வச்சுட்டார்''
"என்ன புதுசா ரொம்ப மரியாதையா பேசுற?''
"அட போய்யா... எவனாவது நாம பேசுறதைப் படம் எடுத்து பேஸ் புக்ல போட்டுட்டா என்ன செய்றது?''
ராயன், மயிலாடுதுறை.

* (நெய்வேலி மெயின் பஜாரில் ஏடிஎம் உள்ளே 
ஒரு பெண்ணும், ஒரு நடுத்தர வயது ஆணும்)
" சார்... இந்த மிஷின்ல பணம் இல்லையா?''
"ஆமாம்... ஒருத்தர் 500 ரூபாய் வரை முயற்சி பண்ணிப் பார்த்துட்டார். பணம் வரலை.''
"நான் ட்ரை பண்ணி பார்க்கவா?''
"தாராளமா... பெண் என்றால் பேயும் இரங்கும்ன்னு சொல்லுவாங்க. ஏடிஎம் மிஷின் இரங்குதான்னு பார்க்கலாம்''
கி.ரவிக்குமார், நெய்வேலி.

எஸ்எம்எஸ்
முட்டாள்கள் பாராட்டுவதை விட...
அறிவாளிகள் திட்டுவதே மேல்.
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

அப்படீங்களா!
பெங்களூருவில் உள்ளது "இன்டஸ் இன்டர்நேஷனல் பள்ளி'. இந்த பள்ளியில் உள்ள ஓர் ஆசிரியையின் பெயர் EAGLE 2.0. அவர் 7 -ஆம் வகுப்பு, 8 -ஆம் வகுப்பு மற்றும் 9 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், புவியியல், வரலாறு ஆகியவற்றைச் சொல்லிக் கொடுக்கிறார். அறிவியல், வரலாறு ஆகிய இரண்டையும் ஓர் ஆசிரியையால் எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அவரை இந்தப் பாடங்கள் தவிர, கணிதம், ஆங்கிலம் போன்ற இன்னும் பல பாடங்களைச் சொல்லித் தரும்படி செய்துவிட முடியும். ஏனென்றால் அவர் ஒரு ரோபோ ஆசிரியை. இந்த ரோபோ ஆசிரியை பாடங்களைச் சொல்லித் தருவதோடு, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உரிய பதிலையும் சொல்கிறார். 
இவரை உருவாக்க 17 பேர் கொண்ட ஒரு குழு CONTENT DEVELOPER ஆகப் பணியாற்றியிருக்கிறது. இந்த 17 பேரும் வெவ்வேறு துறைகளில் திறமைவாய்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த ரோபோ ஆசிரியையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ரோபோ ஆசிரியையை இயக்குவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மோட்டாரை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவரைப் போலவே இன்னும் 3 ரோபோ ஆசிரியைகளை இந்தப் பள்ளி உருவாக்கியிருக்கிறது. ஒவ்வோர் ஆசிரியையையும் உருவாக்க சுமார் ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது. 
"சாதாரணமாக ஓர் ஆசிரியர் பாடம் சொல்லித் தருவதற்கு முன்பு 90 சதவீதம் நேரத்தை அவர் அதற்கான தயாரிப்புகளில் ஒவ்வொரு நாளும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த ரோபோவை உருவாக்கும் சமயத்தில் மட்டுமே பாடம் சொல்லித் தருவதற்கான புரோகிராமை ஏற்படுத்த வேண்டும்'' என்கிறார்கள் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகள். ரோபோ ஆசிரியையை உருவாக்குவதற்குப் பதிலாக மறந்து போய் ரோபோ மாணவர்களை உருவாக்காமல் இருந்தால்... சரி.
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com