மைக்ரோ கதை

துறவி ஒருவரிடம் ஒரு பெண் சொன்னாள்: " என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார். அவரோடு இனி என்னால் வாழ முடியாது... நான் அவரை விட்டு விலகி விடட்டுமா?''
மைக்ரோ கதை

துறவி ஒருவரிடம் ஒரு பெண் சொன்னாள்: " என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார். அவரோடு இனி என்னால் வாழ முடியாது... நான் அவரை விட்டு விலகி விடட்டுமா?''
 துறவி புன்முறுவலோடு எதுவும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து, "இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்குத் தர ஆசைப்படுகிறேன். எது வேண்டும் என்று சொல்'' என்றார்.
 அந்தப் பெண் அந்த இடத்தில் உள்ள பல செடிகளைப் பார்த்துவிட்டு ரோஜா செடி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள்.
 "இந்தச் செடி எனக்கு வேண்டும்'' என்றாள்.
 அதற்குத் துறவி, "அதில் நிறைய முள் இருக்கிறதே... கையில் குத்திவிடுமே?'' என்று கேட்டார்.
 "எனக்கு ரோஜாவை ரொம்பப் பிடிக்கும்'' என்றாள்.
 "அதுபோல்தான் மனிதர்களும். நிறையக் குறைகளுடன் இருப்பார்கள். நமக்குப் பிடித்தமானவர்களின் குறைகள் நம் கண்களில் படாமல் வாழ்வதுதான் வாழ்க்கை'' என்றார் துறவி.
 ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com