சிரி... சிரி... 

"பனங்காட்டு நரின்னுல சொல்லுவாங்க?''"பணத்தைக் காட்டுனா போதும். நரி மாதிரி ஏதாவது செய்வார்''
சிரி... சிரி... 

* "ஒரு நடிகையை பேங்க் மேனேஜராப் போட்டது 
தப்பாப் போச்சு''
"ஏன் சார்?''
"விவாகரத்துக்குக் கூட லோன் கொடுக்குறாங்க''
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

* "உங்க வீட்டுல தலைவர் யார்?''
"குடும்ப அட்டையில் நான்... 
குடும்பத்தில் என் மனைவி''
கு.அருணாசலம், தென்காசி.

* "இவர் பெரிய 
ரோஷக்காரர்''
"அப்படியா?''
"கடன் கொடுத்தவர் 
திட்டியதால் அவர் வீட்டுப் பக்கம் போகாமல், அடுத்த தெரு வழியே போகிறார்''
எஸ்.சீதாராமன், மானூர்.

* "தற்காப்புக் கலைகளில் ஒன்றைக் கூறு''
"ஜால்ரா அடிக்குறது சார்''
ஏ.தென்றல், அல்லம்பட்டி.

* "தலைவர் பணங்காட்டு நரி மாதிரி...''
"பனங்காட்டு நரின்னுல சொல்லுவாங்க?''
"பணத்தைக் காட்டுனா போதும். நரி மாதிரி ஏதாவது செய்வார்''
வி.ரேவதி, தஞ்சை.

* "ஐயய்யோ பேண்ட் கிழிஞ்சு போச்சுடா''
"ஜீன்ஸ் பேண்ட்தானே... விடு பேஷன் என்று சொல்லிக்கலாம்''
செ.ரா.ரவி, செம்பட்டி.

* "எங்க ஊர்ல எந்தக் கூட்டம் நடந்தாலும் இவர்தான் முதல்ல பேசுவார்''
"ஊர்ல பெரிய மனுஷனா?''
"இல்லை சவுண்ட் சர்வீஸ் வெச்சுருக்கார். மைக் டெஸ்ட் பண்ணுவார்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com