பேல்பூரி

பேல்பூரி

கண்டது
* (நாகப்பட்டினத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
ஹோட்டல் தொப்பி வாப்பா
ஏ.கலாமதி, புலிவலம்.

* (மதுரை மாவட்டம் கள்ளிக் குடியில் ஒரு திருமண வாழ்த்துப் பேனரில்)
நட்புக்கு இல்லை... தலைக்கனம்
நாங்களே அதற்கு இலக்கணம்!
குரு.சீனிவாசன், கள்ளிக்குடி.

* (கோவையில் ஓர் உணவகத்தின் நுழைவுவாயிலில் கண்டது)
பசிக்கும்போது உணவு கொடுங்கள்...
அழும்போது கண்ணீரைத் துடையுங்கள்...
துன்பப்படும்போது துணை நில்லுங்கள்...
அநாதரவாக இருக்கும்போது அரவணையுங்கள்...
இறக்கும்போது நிம்மதி கொடுங்கள்...
இல்லாதபோது விட்டுவிடுங்கள்!
வி.ரேவதி தஞ்சாவூர்.

எஸ்எம்எஸ்
காதல் என்பது கார் மாதிரி...
சிலருக்கு கிஃப்ட்டா கிடைக்கும்;
சிலருக்கு லிஃப்ட்டா கிடைக்கும்.
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

கேட்டது
* (கண்டிகையில் வீரண்ண செட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் அம்மாவும் மகளும்)
"அம்மா இந்த சீமந்த வீடியோவில எல்லாரும் இருக்கீங்க... நான் மட்டும் இல்லையே?''
"நீ தான் என் வயித்துல இருக்கியேம்மா''
"அப்போ நீ என்னை முழுங்கிட்டியாம்மா?''
என்.ரவி, சோளிங்கர்.

* (விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி அருகே இரு மாணவர்கள்)
" ஒரு வழியா அவ கிட்டே பேசித் தீர்த்துட்டேன்டா''
"ஏதாவது பிரச்னையாடா?''
"ம்..ஹூம்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை அவகிட்டே பேசித் தீர்த்துட்டேன்னு சொன்னேன்''
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...
மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் 
இறைவனுக்கே கிடைக்காத வரம்.
அ.ப.ஜெயபால், கொள்ளிடம். 

அப்படீங்களா!
வளர்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் 12 வயது முதல் 54 வயது வரை உள்ளவர்களில் 42 சதவீதம் பேர் கிட்டப் பார்வைக் குறைபாட்டாலும், ஐந்திலிருந்து பத்து சதவீதம் பேர் தூரப் பார்வையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்கின்றனர். 
நமது கண்கள் மிக அதிக வெளிச்சத்தைப் பார்க்கும்போது சுருங்கியும், குறைந்த வெளிச்சத்தைப் பார்க்கும்போது விரிந்தும் பார்வையைத் தகவமைத்துக் கொள்கின்றன. அதேபோன்று, அமெரிக்காவில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கான்டாக்ட் லென்ஸ் மூலம் அதிக வெளிச்சத்தைப் பார்க்கும்போது, கான்டாக்ட் லென்ஸ் சிறிது கருமையடைந்து வெளிச்சத்தைக் குறைவாகச் செலுத்துகிறது. குறைவான வெளிச்சத்தின்போதும் அதற்கேற்பவும், இயல்பான வெளிச்சத்தின்போது அதற்கேற்பவும் ஒளியை ஊடுருவச் செய்யும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. 
ஏதேனும் கண் நோயால் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது, கண்களில் காயம் ஏற்பட்டிருக்கும்போது, கண்கள் மிக வறண்டிருக்கும்போது, கண்களிலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒவ்வாமையால் நோய்கள் வந்திருக்கும்போது , இந்த காண்டாக்ட் லென்ஸை அணியக் கூடாது. அமெரிக்காவில் உள்ள ஜான்சன்&ஜான்சன் என்ற நிறுவனம் இந்த காண்டாக்ட் லென்ஸை உருவாக்கியுள்ளது. 
என்.ஜே., சென்னை-58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com