சிரி... சிரி...  

"மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக்கொள்ளலாம் என்கிறார்?''
சிரி... சிரி...  

• "மன்னர் ஏன் மார்கழியில் போரை வைத்துக்
கொள்ளலாம் என்கிறார்?''
"அப்போதுதான் எதிரிகள் மன்னரைப் பார்த்து 
நடுங்குவார்களாம்.
உ.சபாநாயகம், சிதம்பரம்.

• "எங்களுக்கு பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. 
கல்யாணத்துக்கு பொண்ணுக்கு என்ன போடுவீங்க?''
"கை, காலுக்கு மருதாணி, நகத்துக்கு நகபாலீஷ், தலைமுடிக்கு ஹேர் கலர் ஷாம்பு, உதட்டுக்கு 
லிப்ஸ்டிக் இவ்வளவும் போடுவோம்''
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

• "அந்த பெரியவர் 
சரியான சாப்பாட்டு பிரியர்னு 
எதை வச்சு சொல்றீங்க?''
"பல் போனால் 
பக்கோடா போகும்னு 
புதுமொழி சொல்லிட்டுப் போறாரே''
கே.முத்தூஸ், தொண்டி.

• பக்கத்து வீட்டுக்காரர்: நாளையிலிருந்து உனக்கும், உன் வீட்டம்மாவுக்கும் 
சண்டை வரப்போகுது?
இவர்: ஏன் அப்படி சொல்றீங்க?
பக்கத்து வீட்டுக்காரர்: என் மனைவிக்கு புதுசா ஒரு வைர நெக்லஸ் 
வாங்கிக் கொடுத்திருக்கேனே
கே.ஈ.கே, விழுப்புரம்.

• "அப்பா ... இன்னிக்கு 
தான் எங்க சார் உங்கள 
பாராட்டினாங்க''
"எதுக்குடா...?''
"ஹோம் ஒர்க் சரியா 
இருந்துச்சாம்''
ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

• அப்பா : எதுக்கு சார் 
என் பையனை அடிச்சீங்க?
ஆசிரியர்: ஏன்டா ஹோம் ஒர்க் 
பண்ணலன்னு கேட்டா,
நான் ஹாஸ்டல்ல 
தங்கிப் படிக்கிறேன் சார்ன்னு 
சொல்றான் சார்
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com