பேல்பூரி

ஜப்பான் நாட்டின் ஹோன்சூ தீவில் உள்ளது கியாட்டோ நகரம். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் காயாபுகிநோ சேட்டோ
பேல்பூரி

கண்டது
• (தாராபுரத்தில் உள்ள ஒரு சித்த மருத்துவமனையின் பெயர்)
பிரவாளம் வெண்பா நலமனை
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

• (திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் ஓர் ஆட்டோவில்)
நம் உடலுக்கு உயிர் கடவுள்
நம் வாழ்விற்குப் பணம் கடவுள்
என்.சண்முகம், திருவண்ணாமலை.
(திருநெல்வேலி வண்ணார் பேட்டைக்கு அருகே உள்ள ஒரு தெருவின் பெயர்)
எட்டுத்தொகை
எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.

எஸ்எம்எஸ்
பசுமையான தன்னுடைய 
பழைய காலங்களை 
அசைபோட்டுக் கொண்டு 
பாளம்பாளமாக படுத்துக் கிடக்கிறது, விவசாய பூமி.
எஸ்.மாரிமுத்து, சென்னை-64.

கேட்டது
• (நெய்வேலி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி செய்த இருவர்)
"ஏம்ப்பா வாக்கிங்ன்னா ஸ்பீடா நடக்கணும். அன்னநடை போட்டுக்கிட்டு மெதுவா வர்றீயே?''
"உனக்கு சுகர் அதிகமா இருக்கு. நீ வேணா வேகமாப் போ... எனக்குக் கம்மியாத்தான் இருக்கு. நான் மெதுவாவே வர்றேன்''
கி.ரவிக்குமார், நெய்வேலி.

• (திருவாரூர் கூட்டுறவு ஆர்ச் அருகில் இருவர்)
"ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் தொடங்குறதுக்கு முன்னாடி...''
"குடை வாங்குவியா?''
"குடையைக் கூட இரவல் வாங்கிக்கலாம். புதுசா ஒரு கொசு பேட் வாங்கிடுவேன். அதைத்தான் இரவல் வாங்க முடியாது''
சாந்தி, விளமல்.

யோசிக்கிறாங்கப்பா!
உன் வலியை உன்னால் உணர முடிந்தால்...
நீ உயிரோடு இருக்கிறாய்.
பிறர் வலியை உன்னால் உணர முடிந்தால்
நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்.
பே.சண்முகம், செங்கோட்டை.

அப்படீங்களா!
ஜப்பான் நாட்டின் ஹோன்சூ தீவில் உள்ளது கியாட்டோ நகரம். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் காயாபுகிநோ சேட்டோ. இந்த கிராமத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் விரும்பி வருவார்கள். இந்தப் பகுதியில் ஜப்பானின் பாரம்பரிய முறைப்படி வேயப்பட்ட 40 குடிசை வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் அந்த வீடுகளில் தங்கியிருப்பார்கள். 
ஆனால் 2000 - ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் உள்ள ஒரு காப்பக மையம் தீப்பிடித்து எரிந்துவிட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு இதனால் அச்சம் ஏற்பட்டுவிட்டது. 
அந்த அச்சத்தைப் போக்க குடிசைகள் இருக்கும் பகுதியைச் சுற்றிலும் 62 நீரைத் தூவியடிக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளில் இருந்து பீய்ச்சியடிக்கப்படும் தண்ணீர், அந்த குடிசைப் பகுதி முழுவதையும் குளிர்ச்சியடையச் செய்கிறது. பகல் நேரத்தில் வானவில்லையும் உருவாக்கிவிடுகிறது. 
மே, டிசம்பர் மாதங்களில் ஜப்பானுக்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்கள், இந்த குளிர்ச்சியான குடிசைப் பகுதிக்குச் செல்லாமல் இருப்பதில்லை.
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com