Enable Javscript for better performance
பேல்பூரி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்

    பேல்பூரி

    By   |   Published On : 19th April 2020 07:30 PM  |   Last Updated : 19th April 2020 07:32 PM  |  அ+அ அ-  |  

    kadhir4

    கண்டது

    (திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

    வாழக்காய்பட்டி

    கே.பாலாஜி, சேலம்.

    (தென்காசி மேல ரத வீதியில் இருக்கும் ஒரு சைவ உணவகத்தின் பெயர் )

    முக்கு கடை

    வீ. கணேஷ், மதுரை-20.

    (படப்பையில் ஒரு நான்கு சக்கர வாகனத்தின்பின்புறத்தில் )

    சோம்பல் இல்லாதவனின் சாம்பல் கூடசரித்திரம் படைக்கும்.

    சா.ச.பாவேந்தன், கோவிந்தகுடி

    (பார்வதிபுரத்தில் ஒரு தேநீர்க்கடையின் பெயர்)

    தாய்வீடு டீ ஸ்டால்

    ஆனந்தவல்லி, பறக்கை.

    கேட்டது

    (கோவை போத்தனூர் மருந்து கடையில் இருவர்)

    ""ஒருத்தரைப் பார்த்ததும் கைகுலுக்காம நாம கைகூப்பி வணக்கம் சொன்னா கரோனா பரவாது... அப்படித்தானே?''
    ""ஆமாம். அது மட்டுமல்ல... நாம தான் தெரிஞ்சவனைப் பார்த்ததுமே மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு போறோமே... நமக்கு எப்படிப் பரவும்?''

    ஆர்.அஸ்வின்குமார்,
    போத்தனூர்.

    (நெய்வேலியில் ஒரு மளிகை கடை வாசலில் இருவர்)

    ""ஆச்சர்யமா இருக்கே''
    ""எது சார்?''
    ""உங்களுக்கு எல்லாம் கரோனா தாடை வழியா உடம்புக்குள்ள போகுது போல''
    ""ஹி... ஹி... மாஸ்க்கை முகத்தில் தான் போட்டிருந்தேன். கொஞ்சம் மூச்சு விட இறக்கி வைச்சுஇருக்கேன்''

    கி.ரவிக்குமார், நெய்வேலி - 3.

    யோசிக்கிறாங்கப்பா!

    ஏமாற்றியவர்களெல்லாம்
    நம் நம்பிக்கையைப் பெற்றவர்களே!

    மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

    மைக்ரோ கதை

    மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் ரமா நேரமாகிவிட்டதே என்று அவசரமாகக் கிளம்பினாள். அந்த நேரம் பார்த்து அவளுடைய மாமியார் கூப்பிட்டார்.
    "" என்ன...?'' கோபத்துடன் கேட்டாள் ரமா.
    ""காது வலிக்குது. இந்த சொட்டு மருந்தை காதில் விட்டுடும்மா'' என்று கெஞ்சுவது போலக் கேட்டார் மாமியார்.
    ""உங்களுக்கு வேற வேலை இல்லை... எனக்கு ஏற்கெனவே லேட்டாயிடுச்சு''
    சொல்லிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள் ரமா.
    மருத்துவமனைக்கு வந்ததும், 32 ஆம் நம்பர் அறையிலிருந்து அழைப்பு வந்தது. அவசரமாகச் சென்ற ரமா அந்த அறையில் இருந்த பாட்டியைத் தூக்கி உட்கார வைத்து விட்டு, பாட்டியின் கழிவுகளை எடுத்து வெளியே கொட்டி, படுக்கையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
    அப்போது மாமியாரின் ஞாபகம் சட்டென்று வந்து போனது அவளுக்கு.

    பார்வதி கோவிந்தராஜ்,
    திருத்துறைப்பூண்டி.

    எஸ்.எம்.எஸ்.

    பசி அடங்கிய பின்
    கிடைக்கும் உணவும்,
    மனம் வெறுத்த பின்
    கிடைக்கும் அன்பும்
    பயனற்றது.

    எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

    அப்படீங்களா!

    ஒருவருக்கு கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறிவதற்கே குறைந்தது 2 நாட்கள் ஆகும் என்ற நிலை உள்ளது. உலகம் எங்கும் ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் தொற்றை மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய தேவை இப்போது உள்ளது. தற்போது கரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க 24 மணி நேரம் ஆகிறது.

    இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களின் முன்முயற்சியில் "டயக்னஸ்டிக்ஸ் ஃபார் தி ரியல் வேர்ல்டு' என்ற நிறுவனம், கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கருவிக்கு நஅஙஆஅ ஙஅஇஏஐசஉ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

    பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகப்படும் ஒருவரின் மூக்கிலிருந்தும், தொண்டையிலிருந்தும் வரும் சளியை இந்தக் கருவியின் மூலம் சோதனை செய்தால் 90 நிமிடத்துக்குள் இந்தக் கருவி அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று கண்டுபிடித்துவிடும்.

    ஒருவரின் ரத்த மாதிரியை வைத்து கரோனா தொற்று உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டறியும் "ரேபிட் டெஸ்ட் கிட்' என்ற கருவியை சீனா ஏற்கெனவே பயன்படுத்தி வந்தது. தற்போது தமிழக அரசு அதை வாங்கியிருக்கிறது.

    என்.ஜே., சென்னை-58.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp