15 நிமிடங்களில் தெரியும்!

கரோனா தோற்று நோயை உறுதிப்படுத்த  தற்போது  சிறு கருவிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 
15 நிமிடங்களில் தெரியும்!

கரோனா தோற்று நோயை உறுதிப்படுத்த தற்போது சிறு கருவிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் விலை, தரம், திறன் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், இதர நாடுகளில் இந்தக் கருவிகள் இல்லாததால் கரோனா நோய் பாதிப்பினைக் கண்டுபிடிக்க சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவிலும் கரோனா குறித்த ஆராய்ச்சிகள், ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. டில்லிக்கு அருகே இருக்கும் நொய்டாவில் உள்ள "நியூ லேப்' தனது பங்களிப்பினைச் செய்துள்ளது.

கரோனா தொற்று உண்டா? இல்லையா? சிகிச்சை அளிக்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய இனி நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்.

டாக்டர் நதீம் ரஹ்மான், உத்தரபிரதேசத்தை சேர்ந்த உயிரி வேதியியலாளர். இவரது தலைமையில் அமைந்த ஆராய்ச்சி குழு, ஊரடங்கு நேரங்களில் உ. பி அரசின் அனுமதி பெற்று ஆய்வகத்தில் இரவு பகலாக ஆராய்ச்சி செய்து கரோனா தொற்றை 15 நிமிடத்துக்குள் விரைவாகக் கண்டறியும் கருவி ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளது.

""விரலின் நுனியில் ஊசி கொண்டு குத்தி ஒரு துளி ரத்தம் எடுத்து நாங்கள் கண்டுபிடித்திருக்கும் கருவியில் வைத்து.. அதில் நியூ லேப் தயாரித்திருக்கும் வேதியல் திரவத்தின் ஒரு துளி சேர்த்தால் போதும்... முடிவு பதினைந்து நிமிடங்களுக்குள் தெரிந்துவிடும். இந்த கருவியின் விலை ரூ.500.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (சஐய), இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் (ஐஇஙத) ஆகியவை இந்த கருவியை ஆய்வு செய்து அங்கீகரித்துள்ளது. அடுத்த வாரம் கருவிகளின் உற்பத்தி தொடங்கும். வாரத்தில் நான்கு லட்சம் கருவிகளை "நியூ லேப்' தயாரிக்கும். கரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் இதுபோன்ற கருவிகளையும் இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கும்'' என்கிறார் டாக்டர். நதீம் ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com