பேல்பூரி(19/01/2020)

பேல்பூரி(19/01/2020)

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஹெல்மெட் அணிவதை சிலர் விரும்புவதேயில்லை. 

கண்டது
* (மதுரை புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடையில் )
உலக அறிவாளிகளின் இருப்பிடம்
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்.
(சிவகாசியில் ஒரு கல்யாண மண்டபத்தின் பெயர்)
காகா கல்யாண மண்டபம்
எஸ்.மோகன், கோவில்பட்டி.

* (திருப்பரங்குன்றத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான்;
நடிப்பவன் மதிக்கப்படுகிறான்;
ஏமாற்றுபவன் போற்றப்படுகிறான்.
கு.விஜயபாண்டி, மதுரை-16.

யோசிக்கிறாங்கப்பா!
அவமானப்பட்ட பின்
கற்றுக் கொண்ட எதுவும்...
எளிதில் மறந்து போவதில்லை.
வ.வெற்றிச்செல்வி, அகஸ்தியன்பள்ளி.

கேட்டது
(காங்கேயம் பேருந்துநிலையத்தில் கல்லூரி 
மாணவர்கள் இருவர்)
"புல்லட் மோட்டார் சைக்கிளும் என்ஜினியரும் ஒண்ணுதான்னு எப்படிச் சொல்றே மாப்ள?''
"மொதல்ல ஊருக்கு ஒண்ணு ரெண்டுதான் இருக்கும். இப்ப திரும்பிய பக்கமெல்லாம் இருக்கே''
எஸ்.வேல் அரவிந்த், குளத்தூர்.

(விழுப்புரம் ஸ்ரீபாலமுருகன் கோயில் அருகே 
அப்பாவும், மகனும்)
"என்ன வேணும்னு கேட்டு சாமி கும்பிடணும் அப்பா?''
"நிறையப் பணம் வேணும்னு கேளு... நீ படிக்கணும்ல''
"பணம் வந்தா மட்டும் நான் படிக்கவா போறேன்?''
கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

எஸ்எம்எஸ்
நீ எந்தக் காரியத்துக்காக 
அதிக நேரம் செலவழிக்கிறாயோ...
அதுதான் உன்னுடைய அடையாளத்தை 
உறுதி செய்கிறது. 
பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

அப்படீங்களா!
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஹெல்மெட் அணிவதை சிலர் விரும்புவதேயில்லை. 
காரணம், சில ஹெல்மெட்களை அணியும்போது எளிதாகத் தலைக்குள் செல்லாது. மேலும் ஹெல்மெட் தலைக்கு ஏற்ற மாதிரி பொருந்திப் போகாமல் இருந்தால், அணிந்திருப்பவருக்கு மிகச் சிரமமாக இருக்கும்.
இப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லாமல் ஒரு தொப்பியை அணிவதைப் போல எளிதாக அணிந்து கொள்ளக் கூடிய ஹெல்மெட்டை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் HRL Lab உருவாக்கியுள்ளது. அதற்காக ஒருபுதுவிதமான உலோகத்தை அது தயாரித்துள்ளது. 
விபத்தின்போது ஹெல்மெட்டில் படும் தாக்குதலை சாதாரண ஹெல்மெட்டை விட, 27 சதவீதம் அதிகமாக இந்த ஹெல்மெட் தாங்கிக் கொள்ளும். அதேபோன்று, வாகனம் செல்லும் பாதை மேடுபள்ளமாக இருந்து அதனால் ஏற்படும் அதிர்வுகளை பிற ஹெல்மெட்களைவிட 48 சதவீதம் தாங்கிக் கொள்ளும்.
ஹெல்மெட்டின் உட்பகுதியில் திரவ பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளன. சூரிய வெளிச்சத்தில் இருந்து வரக் கூடிய புற ஊதாக் கதிர்கள் ஹெல்மெட்டில் படும்போது, தேவையான அளவுக்கு ஹெல்மெட் நெளிந்து வளைந்து கொடுக்க இந்த திரவ பிளாஸ்டிக் பொருள்கள் உதவுகின்றன. இதனால் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் - ஹெல்மெட் அணிந்திருப்பதையே உணராமல் - ஹெல்மெட் தலையர்களாக வாகனங்களில் செல்லலாம். 
தற்போது கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த ஹெல்மெட்டை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com