பேல்பூரி

ஆயிரம் வேலி
பேல்பூரி

கண்டது

(ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைதாலுகாவில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

ஆயிரம் வேலி

- எம்.சுகாரா, திருவாடானை.

(சென்னை நங்கநல்லூர் 100 அடி சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றின் பெயர்)

நண்பர்கள் மருந்தகம்

த லட்சுமி காந்த், சென்னை - 61.

(பெருந்துறை - ஈரோடுசாலையிலுள்ளஒரு பல் மருத்துவமனையின் பெயர்)

"பல்' கலையகம்

துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

கேட்டது

(சென்னை - பெசன்ட் நகரில்இரண்டு பெண்கள்)

""ஏங்க விக்னேஷ் இருக்காரா?''
""இல்லிங்க வெளியிலபோயிருக்காரு''
""மாஸ்க் க்ளவுஸ் எல்லாம் இங்க இருக்கு?''
""ஷு, சானிடைசர், கூலிங் க்ளாஸ் கூடத்தான் இருக்கு. அவரு வண்டிக்கு பெட்ரோல் போடப் போயிருக்காருங்க, வேணா பங்க்குக்கு போயி பாருங்க''

சசி பிரபு, சென்னை.

(நாகர்கோவில் - மீனாட்சிபுரத்தில்இரு நண்பர்கள்)

""என்னடே... அந்தாளு பாதாள சாக்கடை மூடியை திறந்து உற்றுப் பார்த்துட்டு இருக்காரு ?''
""வெளியே டிராபிக்கா இருக்குறதால உள்ளோட போயிடலாமான்னு பாக்குறாரு போல ?''
""என்னடே ... கிண்டலா ?''
""வேற என்னப்பா... கார்ப்பரேஷன்க்காரங்க எதுக்கு திறந்து பார்ப்பாங்க ? ஏதாவது அடைப்போ, உடைப்போ இருக்கோன்னு தானே பார்ப்பாங்க''

எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்- 1

யோசிக்கிறாங்கப்பா!

அன்பாகப் பார்த்துக் கொள்ளும்உறவுகளை விட...
அன்பைப் புரிந்து கொள்ளும் உறவுகள் அமையப் பெற்றவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்.

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

மைக்ரோ கதை

""8 -ஆம் நம்பர் ரூம்ல உள்ள பேஷண்ட் பாலு எப்படி இருக்காரு சிஸ்டர்?'' என்று அந்த நபர் நர்ஸிடம் கவலையுடன் கேட்டார்.

""பரவாயில்ல சார்... ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டாரு. இன்னும் 1 வாரத்துல டிஸ்சார்ஜ் கூட ஆயிடலாம். ஆமா.... நீங்க யாரு? அவருக்குச் சொந்தமா?''
""நான் தான் சிஸ்டர் அந்த பேஷண்ட் பாலு... நான் பெட்ல இருந்து கேட்டப்ப யாருமே சரியா பதில் சொல்லலை... அதான் இங்கே வந்து கேட்டேன்'' என்றார்
அமைதியாக.

-வி. ரேவதி, தஞ்சை

எஸ்.எம்.எஸ்.


மாட மாளிகை, கூடம் கோபுரம்
கேட்டெல்லாம்
என்றுமே ஏந்தப்படுவதில்லை
பிச்சைப்பாத்திரங்கள்
கௌந்தி.மு, சென்னை.

அப்படீங்களா!


விவசாயம் நாட்டின் மையமான தொழிலாக இருந்த காலத்தில், கண்மாய், குளம், ஏரிகளைப் பாதுகாப்பது அவசியமானதாக இருந்தது. விவசாயம் வீழ்ச்சி அடைய, அடைய குளம், ஏரிகளைத் தூய்மை செய்வது பற்றிய அக்கறை குறைந்துவிட்டது.

இப்போது நகர்ப்புறங்களில் நீச்சல் குளங்கள் அதிகம் உள்ளன. கோயில்களிலும் குளங்கள் உள்ளன. இவற்றை மிக எளிதாகத் தூய்மை செய்யும் கருவிதான் IROBOT MIRRAS30.

மனிதர்கள் குளத்தில் இறங்கி அழுக்கான பகுதிகளைத் தூய்மை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை.

இந்தக் கருவியைக் குளத்திற்குள் தள்ளி விட்டுவிட்டால், தண்ணீரில் உள்ள அழுக்குகள், இலைகள், முடி, பாக்டீரியாக்கள் என எல்லாவற்றையும் நீக்கி, தூய்மை செய்துவிடும். குளத்தின் தரையில், சுவரில் படிந்திருக்கும் பாசிகள், அழுக்குகளை எல்லாம் நீக்கிவிடும். ஒரு நிமிடத்துக்கு 265 லிட்டர் அழுக்கான குளத்து நீரை பம்ப் செய்து, வடிகட்டி தூய்மை செய்யும் திறன் உடையது இந்தக் கருவி.

என்.ஜே., சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com