திரைக் கதிர்

சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 
திரைக் கதிர்


ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா, பாலிவுட்டில் பிரபலமான பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு, நடனமாடிய வீடியோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி வருகிறார். இதைப் பார்த்த வேதிகா, தற்போது  அதே பாடலுக்கு உடையணிந்து ஆடிய நடன வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இருவரது வீடியோக்களையும் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் , பி.எஸ்.வீரப்பா பாணியில், "சபாஷ் சரியான போட்டி' என்று கருத்து பதிந்து வருகின்றனர். 

சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
இந்தியர்கள் அனைவரும் சீனப் பொருட்களைப் புறக்கணித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்திய நிலத்தின் ஒரு பகுதியை மற்றவர்கள் 
எடுத்துக் கொள்வது, உடலில் ஒரு பகுதியை கிழித்தெறிவதற்குச் சமமானது என கூறியுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் இதன் காரணமாக திரைப்படங்கள்  ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.  ஆர்யா நடிப்பில் இயக்குநர் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள "டெடி' படமும் இதில் இணைகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில்  பேசி வருகிறார். இதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகப் பதிலும் அளித்துள்ளார். "அஜித் பற்றியும் விஜய் பற்றியும் ஒரு வார்த்தையில் சொன்னால் எப்படிச் சொல்வீர்கள்?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அஜித்தை "நம்ம தல' என்றும், விஜய்யை "தன்னைக் கவர்ந்த 
மனிதர்' என்றும் பதிலளித்துள்ளார்.

"காதல் கொண்டேன்' திரைப்படம் வெளியாகி 17 வருடங்களாகியிருக்கும் நிலையில் அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சோனியா அகர்வால் நன்றி தெரிவித்துள்ளார். "கடவுள், வசீகரிக்கும் தமிழ்நாடு, செல்வராகவன், கஸ்தூரி ராஜா அனைவருக்கும் நன்றி.. அழகான பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்து 17 வருடங்கள் ஆகின்றன. நன்றி தனுஷ்.. எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி... நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல் கொண்டேன்'' என்று கூறி "காதல் கொண்டேன்' பட போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com