நான்கு தலை​மு​றை​யி​னர் சேக​ரித்த பொருள்​கள்!

பல​ருக்கு பழங்​கா​லத்​துப் பொருள்​களை சேக​ரித்து வைப்​பது ஒரு பொழு​து​போக்கு. அது வருங்​கால சந்​த​தி​யி​னர் முன்​னோர்​கள் காலத்​தில் பயன்​ப​டுத்​திய பொருள்​கள் குறித்து தெரிந்து கொள்ள பயன்​ப​டு​கி​றது
நான்கு தலை​மு​றை​யி​னர் சேக​ரித்த பொருள்​கள்!


பல​ருக்கு பழங்​கா​லத்​துப் பொருள்​களை சேக​ரித்து வைப்​பது ஒரு பொழு​து​போக்கு. அது வருங்​கால சந்​த​தி​யி​னர் முன்​னோர்​கள் காலத்​தில் பயன்​ப​டுத்​திய பொருள்​கள் குறித்து தெரிந்து கொள்ள பயன்​ப​டு​கி​றது.

விரு​து​ந​கர் மாவட்​டம் சிவ​கா​சி​யில் உள்ளகே.ரா​ஜ​ரா​ஜன் நான்​கு​த​லை​மு​றை​க​ளாக, நாண​யங்​கள், ரூபாய் நோட்டு​கள், மன்​னர் காலத்​தில் பயன்​ப​டுத்​திய பல பொருள்​கள், அக​ழாய்​வில் கிடைத்த பொருள்​கள், ஓடு​கள் உள்​ளிட்ட ஆயி​ரக்​க​ணக்​கான பொருள்​க​ளைச் சேக​ரித்து வைத்​துள்​ளார். இது குறித்து அவர் நம்​மி​டம் பகிர்ந்து கொண்​ட​தா​வது:

""எனது தந்தை காளி​ரா​ஜன், அவ​ரது தந்தை அய்​யன், அவ​ரது தந்தை பாப​னா​சம், தற்​போது நான் என நான்கு தலை​மு​றை​க​ளாக பொருள்​க​ளைச் சேக​ரித்து வைத்​துள்​ளோம். எனது முன்​னோர்​கள் வியா​பார விஷ​ய​மாக தமி​ழ​கம் மட்டு​மின்றி, இந்​தி​யா​வில் பல மாநி​லங்​க​ளுக்​குச் சென்று வந்​துள்​ள​னர். அப்​போது பல பொருள்​களை விலைக்கு வாங்கி சேக​ரிக்​கத் தொடங்​கி​னார்.

எனது தந்தை கும்​ப​கோ​ணம், மதுரை உள்​ளிட்ட ஊர்​க​ளில் பழைய இரும்பு வியா​பா​ரி​க​ளி​டம் தொடர்பு வைத்​தி​ருந்​தார். பழைய இரும்​புக் கடைக்கு எதா​வது பழங்​காலப் பொருள்​கள் விற்​ப​னைக்கு வந்​தால் அந்த கடைக்​கா​ரர் எனது தந்​தைக்கு தக​வல் கொடுப்​பார். பின்​னர் எனது தந்தை நேரில் சென்று வாங்கி வரு​வார். நானும் இந்த பாணி​யைப் பின்​பற்​று​கி​றேன். இப்​ப​டி​யாக நான்கு தலை​மு​றை​க​ளாக நாண​யங்​கள், ரூபாய் நோட்டு​கள், மன்​னர்​கள் காலத்​தில் பயன்​ப​டுத்​திய பல்​வேறு பொருள்​கள் என சேக​ரித்து வைத்​துள்​ளோம். இப்​போது இந்த பொருள்​களை விரு​து​ந​கர் மாவட்​டம், மதுரை, பழனி, திரு​நெல்​வேலி உள்​ளிட்ட பல ஊர்​க​ளுக்​குச் சென்று பள்ளி, கல்​லூ​ரி​க​ளில் கண்​காட்சி நடத்தி வரு​கி​றேன். இதன்​மூ​லம் தற்​போ​தைய தலை​மு​றை​யி​னர் பழங்​கால வாழ்க்கை முறை மற்​றும் வர​லாற்றைத் தெரிந்து கொள்ள முடி​கி​றது. இப்​போது என்​னி​டம் இந்​தி​யா​வில் முதன்​மு​த​லாக அச்​சி​டப்​பட்ட, அதா​வது கி.மு.600 ஆம் ஆண்டு ஆட்சி செய்த சந்​தி​ர​குப்​த​மெ​ள​ரி​யர் காலத்​தில் அச்​சி​டப்​பட்ட வெள்​ளி​நா​ண​யம் உள்​ளது. அப்​போது மக்​க​ளி​டம் பண்​ட​மாற்று முறை இருந்து வந்​தது. வச​தி​ப​டைத்​த​வர்​கள்​தான் நாண​யங்​களை வைத்​தி​ருந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. அப்​போது ஒரு வெள்​ளி​காசு கொடுத்​தால் 10 யானை அல்​லது 50 குதிரை வாங்​க​லாம் என கூறப்​ப​டு​கி​றது. அப்​போ​தைய நாண​யம் முதல் இப்​போது நடப்​பில் உள்ள நாண​யம் வரை என்​னி​டம் உள்​ளது. கிருஷ்​ண​தே​வ​ரா​யர், பாபர், அக்​பர், ஜகாங்​கீர், ஒள​ரங்​க​சீப் உள்​ளிட்ட மான்​னர்​கா​லத்து தங்​கம் மற்​றும் வெள்ளி நாண​யங்​கள் உள்​ளன. இந்​தி​யாவை பிரிட்​டிஷ் ஆட்சி செய்​த​போது, புழக்​கத்​தில் இருந்த ஓட்டை காலணா, அரை​யணா உள்​ளிட்​டவை உள்​ளன. அலெக்​சாண்​டர் காலத்து வெள்ளி நாண​யம் உள்​ளது.

அமெ​ரிக்கா, பிரான்சு, சைனா, ஜப்​பான், இந்​தியா உள்​ளிட்ட பல நாடு​க​ளின் ரூபாய்​கள் உள்​ளன.

மன்​னர்​கள் காலத்து பொருள்​கள் ஆயி​ரக்​க​ணக்​கில் உள்​ளன. அந்த காலத்​தில் பெரும்​பா​லும் செப்பு பாத்​தி​ரங்​களே உள்​ளன. இறைச்சி வைக்​கும் பாத்​தி​ரம், அக்​கா​லப் பெண்​கள் அணிந்​தி​ருந்த வெள்ளிக் கொலுசு உள்​ளிட்ட பல பொருள்​கள் உள்​ளன. மரத்​தில் அதிக வேலை​பா​டு​டன் கூறிய கிளி, மயில், அரி​வாள்​மனை போன்ற பல பொருள்​கள் உள்​ளன. சங்க கால விளக்கு, கல்​வி​ளக்கு, மர உண்​டி​யல், பாக்​கு​வெட்டி, சிக்​கு​வாரி, குங்​கு​மச்​சி​மிழ் உள்​ளிட்ட பல பொருள்​கள் உள்​ளன. மன்​னர் காலத்து குத்​து​வாள், இடுப்​பு​வாள், அரி​வாள், ஈட்டி போன்ற பொருள்​கள் உள்​ளன.

இந்​தப் பொருள்​களை அமெ​ரிக்கா, கனடா, பிரான்சு ஆகிய வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்த தொல்​லி​யல்​துறை மற்​றும் இந்​திய தொல்​லி​யல்​து​றை​யி​னர் பார்​வை​யிட்​டுள்​ள​னர்.​ஜெர்​ம​னி​யில் அச்​சிட்ட, பர​ம​சி​வன், கிருஷ்​ணன்-​ராதை ஆகிய படங்​கள் மூலிகை மையி​னால் அச்​சி​டப்​பட்​டுள்​ள​தால் இன்​றும் புதி​து​போல உள்​ளது.

எனக்கு பள்​ளி​யில் படிக்​கும்​போதே வர​லாறு குறித்த ஆர்​வம் ஏற்​பட்​டது. எனவே நானும் கடந்த 40 ஆண்​டு​க​ளாக பல பொருள்​க​ளைச் சேக​ரித்​துள்​ளேன். வரும் காலத்​தில் எனது பிள்​ளை​கள் இவற்​றைப் பாது​காப்​பார்​கள்'' என்​றார் ராஜ​ரா​ஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com