திரைக் கதிர்

அனுஷ்காவின் காதல், திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அது கிசுகிசுவாக கடந்து போய் விடும். நடிகர் பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசு உலா வந்த நிலையில் கடந்த வாரம்
திரைக் கதிர்

• அனுஷ்காவின் காதல், திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அது கிசுகிசுவாக கடந்து போய் விடும். நடிகர் பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த 3 ஆண்டுகளாக கிசுகிசு உலா வந்த நிலையில் கடந்த வாரம் அனுஷ்காவுக்கும் "இஞ்சி இடுப்பழகி' படத்தின் இயக்குநர் பிரகாஷ் கோவெல்முடிக்கும் காதல், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் வேகமாக கிசுகிசு பரவியது. 
இதுகுறித்து மவுனம் காத்து வந்த அனுஷ்கா தற்போது பதில் அளித்திருக்கிறார். ""கிசுகிசுக்கள், வதந்திகள் மூலம் நான் பாதிப்படைவது கிடையாது. என்னுடைய திருமணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரியவில்லை. யாருடனும் உறவில் இருப்பதை யாராலும் மறைக்க முடியாது. என்னால் மட்டும் எப்படி மறைக்க முடியும்? திருமணம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். மக்களும் அதை உணர்வுப்பூர்வமாகவே அணுகுவார்கள். எனக்கென்று வாழ்வில் தனி இடங்கள் உள்ளன'' என்று பேசியுள்ளார் அனுஷ்கா. 

• நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கு படத்துக்காக ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இதில் சிரஞ்சீவி ஜோடியாக நடிப்பது சிறப்பு. இந்தப் படத்துக்கு "ஆச்சார்யா' என பெயரிட்டுள்ளனர். 
கொரட்டாலா சிவா இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 
விரைவில் இதன் படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட ரெஜினாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. உடனே அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். ""சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோவின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதும் பெரிய விஷயம்தான். பிரபல நடிகைகள் பலரும் இதுபோல் டான்ஸ் ஆடும்போது நான் மட்டும் முடியாது என சொல்ல முடியுமா?'' என்று தெரிவித்துள்ளார் ரெஜினா. 
காஜல் அகர்வாலிடம் அவ்வளவாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என வரிசைக் கட்டி நடித்து வந்தவர், இப்போது கைவசம் படங்கள் இல்லாமல் உள்ளார். கமலின் "இந்தியன் 2' படம் மட்டுமே அவர் கையில் உள்ளது. வாய்ப்புகள் அதிகம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். ஹோலி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். தனது தங்கை நிஷா அகர்வாலின் குழந்தை இஷான் வலேச்சாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவர் குடும்பத்தினர் மீது வண்ணங்கள் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினருக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்தார். 

• தமிழ்ப் பெண்ணாக இருந்து தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்றிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். "அட்டகத்தி', "திருடன் போலீஸ்', "ஆறுவது சினம்', "தர்மதுரை', "முப்பரிமாணம்", "சாமி 2' என இவரது படங்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. இவர் ஆரம்ப காலகட்டத்தில் "காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். சிறப்பாக நடிக்கிறார் என்று அவருக்குப் பெயர் கிடைத்தாலும் அம்மா வேடத்தில் நடிப்பதால் ஜோடியாக நடிக்க ஹீரோக்கள் யாரும் அவரை அழைப்பதில்லையாம். இதனால் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். ""சினிமாவில் ஹீரோயினுக்கு தேவையான தகுதிகளுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அம்மா வேடங்களிலும் நடித்தேன். இதனால் எனக்கு வயது அதிகமாகி விட்டதாக நினைக்கிறார்கள். ஹீரோக்கள் தங்களுக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள். இனி அம்மா வேடத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்'' என தெரிவித்தார். 
ஜி.அசோக்

• இவன் தந்திரன்', "விக்ரம் வேதா', "ரிச்சி' படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடந்த ஆண்டு அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது "மாறா', "சக்ரா' என 2 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவிலிருந்து சில நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கச் செல்கின்றனர். 
சிலர் தனது சம்பாத்தியத்தை வேறு தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி கூடங்கள் திறந்து நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது சென்னையில் சொந்தமாக ஓட்டல் திறந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, "இது பெரிய ரெஸ்டாரன்ட்டைவிட கொஞ்சம் சிறியது; காபி ஷாப்பைவிட கொஞ்சம் பெரியது. 
சுவையான உணவு வகைகள் எளிமையாகவும், ஃபிரஷ்ஷாகவும் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நான் என்றுமே சுத்தம், சுகாதாரத்தை அதிகம் பார்ப்பேன். உணவு விஷயத்திலும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதில் ஒருபடி முன்னதாக இருப்பேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com