திரைக் கதிர்

எஸ்.பி.பி.யின் மகன் சரணும், அஜித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். 
திரைக் கதிர்

எஸ்.பி.பி.யின் மகன் சரணும், அஜித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். மகனின் நண்பன் என்பதால் அஜித் முதன் முதலில் நடிகராக அறிமுகமான "பிரேம புஸ்தகம்' படத்தின் தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்தவர் எஸ்.பி.பி.,தான். அது மட்டுமல்ல, தமிழில் அஜித் கதாநாயகனாக அறிமுகமான "அமராவதி' படத்திலும் அப்படத்தின் இயக்குநர் செல்வாவிடம் அஜித்தைப் பற்றிக் கூறி சிபாரிசு செய்தது எஸ்.பி.பி., தான் என தெரிய வந்துள்ளது.
 

--------------------------------------------------------------

இன்ஸ்டாகிராமில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி காட்டமான ஒரு பதிவிட்டிருந்தார் லட்சுமி மேனன். அதில், ""பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கு பெறவில்லை. இப்போதும், எப்போதும் அடுத்தவர்களின் சாப்பாடு தட்டைக் கழுவுவது, கழிவறையைக் கழுவுவது ஆகியவற்றைச் செய்ய மாட்டேன். அது மட்டுமல்ல, கேமிரா முன் பரபரப்புக்காக சண்டை போட்டுக் கொள்வதும் பிடிக்காது. ஒரு மோசமான ஷோவுக்காக நான் போவேன் என யூகங்களின் அடிப்படையில் என்னிடம் வராதீர்கள்'' எனப் பதிவிட்டிருந்தார்.

--------------------------------------------------------------


"பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா அரசியல் கதை ஒன்றில் நடிக்கவுள்ளார். சமீப நாட்களாக தன்னையும் தனது குடும்பத்தையும் சுழன்றடிக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு இதன் மூலமாகப் பதிலடி கொடுப்பார் அல்லது பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றே சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, சூர்யாவின் ரசிகர்கள் பலர், அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்து போஸ்டர்கள் ஒட்டிவரும் நிலையில், அரசியல் பாதையிலும் "பல்ஸ்' பார்க்கும் படமாக இது இருக்கும் என்றும் சூர்யா வட்டாரத்தில் சொல்கிறார்கள். 

--------------------------------------------------------------

முதன் முறையாக சமந்தா மாற்றுத் திறனாளியாக நடிக்கவுள்ளார். பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ஹாரர் ஜானரில் உருவாகவுள்ளதாம். மேலும் ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com