சுதாங்கன் சில நினைவுகள் - டைரி குறிப்பு     

11 செப்டம்பர் 2019 -நாளன்று எனது டைரியில் எழுதின குறிப்பைப் பாருங்கள். சுதாங்கன் குறித்த அன்றைய பதிவு - இன்றும் இது பொருந்தும்.
சுதாங்கன் சில நினைவுகள் - டைரி குறிப்பு     

-நடிகர் சிவகுமார்


11 செப்டம்பர் 2019 -நாளன்று எனது டைரியில் எழுதின குறிப்பைப் பாருங்கள். சுதாங்கன் குறித்த அன்றைய பதிவு - இன்றும் இது பொருந்தும்.

ஆகாஷ் - ஷாகுன் திருமணம் டெல்லி.

VIVANTA SURATKUND - NCR-HOTEL

1980-களின் நடுவில் ஜூனியர் விகடன் இதழ் துவக்கப்பட்டது. "மனிதனின் மறுபக்கம்' எனது 150 - ஆவது படத்தின் படப்பிடிப்பு சமயம் ஜூவியின் இரண்டாவது இதழுக்கு பேட்டி எடுக்க வந்தார் சுதாங்கன். பின்னர் 1 வருடம் 10 மாதம் "இது ராஜபாட்டை அல்ல' என்ற தலைப்பில் எனது வாழ்க்கை வரலாற்றை - ஓவியம்- திரையுலக அனுபவம் அனைத்தையும் இணைத்து ஜூவியில் எழுத ஊக்கமளித்தார்.

சுதாங்கன் - சாந்தி காதல் திருமணம். சுதாங்கன் அய்யங்கார் - சாந்தி ஐயர் பெண். இவர்கள் திருமணத்திற்கு மட்டுமல்ல, குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டேன்.

2005 - நவம்பர் 15-ஆம் தேதி சுதாங்கனும் சாந்தியும், எனது மகள் பிருந்தா திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

2006- நவம் - 27 இரவு விடியற்காலை இரண்டரை மணி வரை இங்கிலாந்தில் படித்த ஒரே மகன் ஆகாஷுடன் போனில் பேசிக் கொண்டிருந்த சாந்தி, காய்ச்சலின் கடுமை தாங்காமல் மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு உயிர்விட்டார்.

அம்மா இறந்த போது ஆகாஷ் யு.கே. லங்காய்ஷ்யர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி- பிசினஸ் ஸ்டடீஸ் படித்துக் கொண்டிருந்தான்.

சுதாங்கனுக்கு அப்போது வேலை இல்லை. கண்ணதாசன் பதிப்பகம் இவர் மொழி பெயர்த்த நூல்களுக்காக மாதம் ரூபாய் 40,000 கொடுத்தனர்.

சாந்தி இறக்கும் தறுவாயில், உங்கள் மகனை எங்கள் செலவில் படிக்க வைக்கிறோம் என்று சொன்ன அவர் வேலை பார்த்த ஐடி நிறுவனம் பின்னர் கைவிரித்து விட்டது. மகனை படிக்க வைக்க படாதபாடுபட்டார், மின்சார பில் கட்டக் கூட முடியாமல், 7 நாள் இருட்டறையில் வசித்திருக்கிறார் சுதாங்கன்.

பின் ஆகாஷ் படிப்பு முடிந்து KTM நிறுவனத்தில் வேலை செய்தார். ஒரு வருடம் கழித்து சிங்கப்பூருக்கு மேல்படிப்புக்காகச் சென்றார் .

அப்போது ZEE TAMIL தொலைக்காட்சியில் சுதாங்கன் மாதம் ஒன்றரை லட்சம் சம்பளத்தில் பணியில் அமர்ந்தார். ஆகாஷின் படிப்பு முடிவதற்குள் சுதாங்கன் ஜீ தமிழில் இருந்து நின்றுவிட்டார். சோதனை மேல் சோதனை.

சிங்கப்பூர் படிப்பு முடிந்து வந்த ஆகாஷ் மீண்டும் கே.டி.எம்மில் வேலை செய்தார். இப்போது ஈஉகஞஐபபஉ நிறுவனத்தில் அமெரிக்காவில் 30 வயதில், டைரக்டராக இருக்கிறார். உடன் வேலை பார்த்த பஞ்சாபி பெண் ஷாகுனை இன்று மணக்கிறார். சென்னையிலிருந்து நான் என் துணைவி லட்சுமி மற்றும் ஃபோர் பிரேம் கல்யாணத்துடன் சென்று மணமக்களை வாழ்த்தி வந்தேன்.

11 செப்டம்பர் 2020 - இன்று சுதாங்கனின் மகன் திருமணம் நடந்து ஓர் ஆண்டாகிறது. கடந்த இருவாரங்களாக உடல் நலன் குன்றி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுதாங்கன், மகன் ஆகாஷ் - ஷாகுன் முதலாவது திருமண நாள் வரைக்கும் தான் இருப்பேன் என்பது போல நம்மிடம் இருந்து விடைபெற்றதை என்ன சொல்ல?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com