ட்ரெண்ட் ஆகும் சாய் பல்லவி!

"மாரி 2'  படத்தில் இடம் பெற்ற "ரெளடி பேபி....' பாடல்தான் தென்னிந்தியாவின் தற்போது வரை வைரல். 
ட்ரெண்ட் ஆகும் சாய் பல்லவி!

"மாரி 2' படத்தில் இடம் பெற்ற "ரெளடி பேபி....' பாடல்தான் தென்னிந்தியாவின் தற்போது வரை வைரல்.

அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் பிரபுதேவாவின் நடன அமைப்பு. அதை விஷுவலாக வெளிக்காட்டிய தனுஷ் - சாய் பல்லவி அண்ட் கோ போட்ட குத்தாட்ட நடனமே தமிழ் சினிமாவுக்குப் புதிது. தற்போது வரை 225 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதிக பார்வைகள் பெற்ற தமிழ்ப் பாடல்கள் வரிசையில் இதுதான் டாப். இப்போது இந்த சாதனையை முறியடித்து வருகிறது ஒரு தெலுங்குப் பாடல்!


நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள "லவ் ஸ்டோரி' படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

"ரௌடி பேபி...' பாடலுக்குப் பிறகு மீண்டும் ஓர் அட்டகாசமான நடனத்தை நடிகை சாய் பல்லவி ஆடியுள்ளார். அவரது நடனத்தில் தற்போது "லவ் ஸ்டோரி'யின் "சரங்கதரியா....' பாடலின் லிரிக் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. லிரிக் விடியோவின் இடை இடையே சாய் பல்லவியின் நடனமும் க்யூட் ரியாக்ஷனும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறது.

தனது கணவர் நாக சைதன்யாவின் புதிய படமான "லவ் ஸ்டோரி' படத்தின் பாடலை தற்போது நடிகை சமந்தா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சாய் பல்லவியின் நடனத்தையும் க்யூட் ரியாக்ஷன்களையும் வெகுவாகப் பாராட்டி உள்ளார் சமந்தா.

ஆழமான நடிப்பு மற்றும் அமர்க்களமான நடனத்துக்கு சொந்தக்காரியான இந்த மலர் டீச்சரை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சாய் பல்லவி குறித்த எந்தவொரு செய்தி வெளியானாலும் அவரது ரசிகர்கள் ஆஜராகி டிரெண்ட் செய்யாமல் விடமாட்டார்கள். தற்போதும், சாய் பல்லவி என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது!

"சாரங்க தரியா' பாடல் வெளியாகி ஹிட் ஆனதும், கூடவே வம்பும் கிளம்பிவிட்டது. ""இந்தப் பாடலும் - இதன் இசை வடிவமும் என்னுடையது. நான் சூப்பர் சிங்கர் போட்டி ஒன்றில் இதே பாடலைப்பாடி பாராட்டு பெற்றவள்'' என்று கோமலி என்கிற நாட்டுப்புற கலைஞர் கொடிபிடித்துள்ளார்.

டிவி புகழ் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றைப் பாடி ஆல்பமும் வெளியிட்டு, அந்த ஆல்பமும் சக்கைப்போடு போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோமலியின் இந்த குற்றசாட்டுக்குப் பிறகு "சாரங்க தரியா' பாடல் விவகாரமும் சூடு பிடித்துவிட்டது. கோமலிக்கும் படக் குழுவுக்கும் பல கட்ட பேச்சு வார்த்தைகள்; எதிலும் உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில் கோமலியின் பெயரை படத்தின் டைட்டிலில் பாடல் இசை வடிவம் என்று அவரது பெயரைப் போடவும், அவருக்கு உரிய தொகை கொடுக்கவும் ஒத்துக் கொண்டதோடு, படத்தின் இயக்குநர் தனது அடுத்த படத்தில் கோமலிக்கு பாடல் எழுத வாய்ப்பும் - பாடும் வாய்ப்பு வழங்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதன் அடிப்படையில் கோமலி சாந்தம் அடைந்து "லவ் ஸ்டோரி' படத்தில் இந்தப் பாடல் இடம்பெற அனுமதித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com