திரைக்கதிர்

"நிழல்' என்ற மலையாளப்  படத்தில் ஏழு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா.
திரைக்கதிர்


"நிழல்' என்ற மலையாளப்  படத்தில் ஏழு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. இந்த கேரக்டரில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என படத்தின் ஹீரோ குஞ்சாக்கோ போபனே நயன்தாராவிடம் பேசி சம்மதிக்க வைத்தாராம். 

இப்படத்தை தமிழிலும் வெளியிடவுள்ளனர்.

--------------------------------------------------------------------------------------------------

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது "ஸ்டோன் பென்ச்' மூலம் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இப்போது 5-ஆவது தயாரிப்பாக "பபூன்' என்ற படத்தை எடுக்கிறார். இதில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். அசோக் வீரப்பன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் நாடகக் கலைஞர் தோற்றத்தில் வைபவ் உள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------

"அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியர். அவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர் என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார். இன்றைய இளம் முன்னணி  நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த  புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------

" மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் "தளபதி 65' படத்தின் புதிய செய்தியை  நடன இயக்குநர் ஜானி வெளியிட்டிருக்கிறார். " " என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.  பாடல்களுக்கான ஒத்திகை விரைவில் தொடங்கி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து பாடலுக்கான  படப்பிடிப்பு நடக்க இருக்கிறது'' என்று சுட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

--------------------------------------------------------------------------------------------------

"ஜருகண்டி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ரெபா மோனிகா ஜான். விஜய் நடித்த "பிகில்' படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனையாக நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும்  "எப்.ஐ.ஆர்' படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஆல்பங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார் ரெபா.
 

--------------------------------------------------------------------------------------------------

"டூ லெட்' , "திரெளபதி' ஆகிய படங்களின் மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடித்துள்ள "மண்டேலா' தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஷீலா ராஜ்குமார் நடிப்புக்கு பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.  அடுத்து இவர் "ஜோதி' என்கிற திகில் படத்தில் நடிக்கிறார்.  

--------------------------------------------------------------------------------------------------

"சூரரைப் போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது.  ஆனால் தற்போது இந்த படம் வெளிவந்த அமேசான் ப்ரைம் டைம் நிறுவனம், படத்தை "உதான்' என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.

--------------------------------------------------------------------------------------------------

ஹிந்தியில் வெளிவந்த்  " பிங்க்',   தமிழில் "நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக்கானது. தற்போது  தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் "வக்கீல் சாப்' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி. ""இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் நான் எனது வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் திருப்தி அடைகிறேன்'' என்கிறார் அஞ்சலி.

--------------------------------------------------------------------------------------------------
 

ஜீத்து ஜோசப் இயக்கிய "திரிஷ்யம்' படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்த மீனா, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார். இந்த நிலையில் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷுடன் இணைந்து நடித்தவர், தற்போது "திரிஷ்யம்-2' தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

--------------------------------------------------------------------------------------------------
 

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெரும் வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் அதர்வா நடிக்கும் இன்னும் பெயர் வைக்காத படத்தை சாம் ஆண்டர்சன் இயக்கி வருகிறார். இதில் ஒரு நீண்ட சண்டைக்காட்சியை சிங்கிள் டேக்கில் எடுத்து முடித்துள்ளார்கள். 

--------------------------------------------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com