பேல்பூரி

உனக்கு-20 எனக்கு-18.
பேல்பூரி

கண்டது

(வேதாரண்யம் அருகிலுள்ள ஒருஜவுளிக்கடையின் பெயர்)

உனக்கு-20
எனக்கு-18.

- எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.
 

(ராமநாதபுரம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

வெள்ளரி ஓடை

- மு.சுகாரா, ராமநாதபுரம்.

(சென்னை- நங்கநல்லூர் வெற்றிவேல் திரையரங்கின் அருகில் உள்ள ஒரு தேநீர்க்கடையின் பெயர்)

U1 Tea Stall
 

த.லட்சுமி காந்த்,
சென்னை -61.

(திருநெல்வேலி மாவட்டம் அருகிலுள்ளஒரு கிராமத்தின் பெயர்)

பால் கட்டளை.

ச.ஜான்ரவி, கோவில்பட்டி.

கேட்டது

(லால்குடி - திருச்சி சத்திரம் பேருந்தில் கண்டக்டரிடம் பயணிகள் இருவர்)

""கண்டக்டரே... சத்திரம் பஸ்ஸ்டாண்டு ரெண்டு டிக்கட் குடுங்க''
""அம்பது ரூபா எடுங்க''
""என்னா கண்டக்டரே... அநியாயமா இருக்குது? ரெண்டு டிக்கட் முப்பது ரூவா தானே?
அம்பது ரூவா கேக்கிறீங்க?''
""டிக்கட் முப்பது ரூபாதான்... நீங்க ரெண்டு பேரும் "மாஸ்க்' போடாம ஏறிட்டீங்க... இந்தாங்க ரெண்டு "மாஸ்க்'. அதுக்கு இருவது ரூபா... புரியுதா? இந்த இருபது ரூபாய பாத்தீங்கன்னா... பஸ் ஸ்டாண்டுல எறங்குன உடனே அங்க மாநகராட்சி ஆளுங்க ரெடியா இருக்காங்க... ஆளுக்கு 200 ரூபா ஃபைன் போட்டுடுவாங்க... பரவாயில்லையா?''

- க.விஜயபாஸ்கர்,
திருச்சி.

(சிதம்பரம் ஆசிரியர் நகரில் ஒரு வீட்டில்)

""ஏங்க காய்கறிகாரன் உங்களுக்கு ஏதாவது சொந்தமா ?''
"" இல்லீயே... எதுக்கு கேட்கிறே?''
""எல்லா"சொத்தையும்'உங்க தலையில கட்டி இருக்கானே?''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.



யோசிக்கிறாங்கப்பா!

உள்ளத்தை எப்போதும்
உளியாக வைத்துக்கொள்!
சிலையாவதும் சிறையாவதும்
நீ செதுக்கும் தன்மையைப் பொறுத்தது.

மா.பழனி,
தருமபுரி.

மைக்ரோ கதை


ஒரு பலசாலி விறகு வெட்ட கோடரியோடு காட்டுக்குச் சென்றான். முதல் நாள் பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச் சாய்த்தான். இரண்டாம் நாளோ முதல்நாள் வெட்டிய மரங்களின் எண்ணிக்கையில் பாதிதான் வெட்டினான். மூன்றாம் நாள் ஒரு மரத்தை வெட்டிச் சாய்ப்பதற்கே அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிட்டது. தன்னுடைய பலம் போய்விட்டு என்று காட்டில் உட்கார்ந்து அழத் தொடங்கினான்.

அப்போது அந்த வழியாக வந்த வேடன் அவனைப் பார்த்து, ""ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டான். அழுகையை நிறுத்திவிட்டது காரணத்தைச் சொன்னான் பலசாலி.

கோடரியைச் சற்று கூர்ந்து பார்த்தான்.

""கொஞ்சம் பொறு'' என்று அந்த இடத்தைவிட்டு அகன்றான் வேடன்.

சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்த வேடன் கோடரியை பலசாலியிடம் கொடுத்து மரத்தை வெட்டச் சொன்னான், பலசாலி மரத்தை வெட்டத் தொடங்கிய அரை மணி நேரத்தில் மரத்தை வெட்டிவிட்டான். "எப்படி தன்னால் மரத்தை எளிதாக வெட்ட முடிந்தது?' என்று குழம்பினான்.

வேடன் சிரித்தவாறே சொன்னான்:

"" என்ன யோசிக்கிறாய்? உன் கோடரி கூர் மழுங்கியிருந்தது. நான் தீட்டிக் கொண்டு வந்தேன்''

ஜே.மகரூப்,
குலசேகரன்பட்டினம்.



எஸ்.எம்.எஸ்.

தண்ணீர் புறத்தைத் தூய்மை செய்கிறது.
கண்ணீர் அகத்தைத் தூய்மை செய்கிறது.

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.



அப்படீங்களா!


ஆஸ்திரேலியாவில் ரயில் போக்குவரத்து பல புதிய மாற்றங்களைச் சந்திக்கப் போகிறது. இதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாகஆஸ்திரேலியன் ரயில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டு வந்தது.

இப்போது ரயில்கள், ரயில் தண்டவாளத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் மூலம் இயங்கி வருகின்றன. ஆஸ்திரேலியன் ரயில் போக்குவரத்துத்துறை இந்த சிக்னல்களை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக "ஐரோப்பிய ட்ரெயின் கண்ட்ரோல் சிஸ்டம் லெவல் -2' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் டிஜிட்டல் சிஸ்டத்தைக் கொண்டு வருகிறது.

இந்தப் புதியமுறை மூலம் ஓட்டுநர்கள்ரயிலின் இயக்கத்தைக் கண்காணிப்பார்கள். கட்டுப்படுத்துவார்கள். ரயில்களின் வேகம்அதிகரிப்பதுடன், பயண நேரமும் குறையும்.

ரயில் ஓட்டுநர் முன் உள்ள திரையில் ரயிலைத் தொடர்ந்து இயக்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா? போன்ற தகவல்கள் வரும். எவ்வளவு வேகத்தில் ரயில் செல்ல வேண்டும், தற்போது எந்த வேகத்தில் செல்கிறது என்பன போன்ற தகவல்களும் திரையில்தெரியும்.

ரயில்களை இயக்கும் மையத்திலிருந்து ரயிலுக்கும், ரயில்களிலிருந்து ரயில்களை இயக்கும் மையத்துக்கும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதற்கு ரேடியோ முறை பயன்படுத்தப்படும்.

ரயில்கள் எங்கேயாவது நின்றுவிட்டால், ரயில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்தை மேலாண்மைமுறையையும் ஆஸ்திரேலியன் ரயில்போக்குவரத்துத்துறை பயன்படுத்தப் போகிறது.

என்.ஜே.,
சென்னை-58
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com