சிரட்டையில் சித்திரம்!

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பல  பொருள்கள்   அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காதவற்றை மக்கள் தற்போது விரும்பி வாங்குகிறார்கள்.  
சிரட்டையில் சித்திரம்!

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பல பொருள்கள் அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காதவற்றை மக்கள் தற்போது விரும்பி வாங்குகிறார்கள்.

முன்பு கன்னியாகுமாரியில் தேங்காய் சிரட்டையினால் தயாரிக்கப்ட்ட அலங்கார பொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. தற்போது பல சுற்றுலாத் தளங்களில் சிரட்டையினால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நமது முன்னோர்கள் சிரட்டையிலான அகப்பை , தண்ணீர் ஊற்றும் கப் ஆகியவற்றைச் செய்து பயன்படுத்தி வந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பூவாணி கிராமத்தைச் சேர்ந்த க.சின்னத்தம்பி என்ற 32 வயது இளைஞர் சிரட்டையில் பல வகையான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொ ண்டாதாவது:

""நான்ஏழாம் வகுப்பு வரைதான் படித்தேன். சிறு வயதிலேயே கேரளாவிற்கு ரப்பர் தோட்டத்திற்கு கூலி வேலைக்குச் சென்றேன். எனக்குத் திருமணம் முடித்து விட்ட பின் னரும் கேரளாவில் குடும்பத்துடன் சென்று வேலை செய்து வந்தேன்.

2020 - ஆம் ஆண்டு நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவித்ததும், சொந்த ஊரான பூவாணிக்கு வந்துவிட்டேன். குடும்பத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

கேரளாவில் இருந்தபோது சிரட்டையில் உண்டியில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தேன். அதையே முழு நேரத்தொழிலாக செய்யலாம் என முடிவு செய்தேன். நான் கேரளாவிற்குச் செல்லும்போதுதேக்கடியில் பல கடைகளில் சிரட்டையினால் செய்யப்பட்ட பல அலங்கார பொருள்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோல நாமும் பல பொருள்களைச் சிரட்டையில் தயாரிக்க வேண்டும் என நினைத்தேன்.

எனது வீட்டருகே ஒரு நர்சரி கார்டன் உள்ளது. அங்கே முளைக்காத தேங்காயை தூக்கி எறிந்து விடுவார்கள். நான் அவற்றை கேட்டு எடுத்து வந்து தொடக்கத்தில் டீ கப் தயாரித்தேன். முதலில் டீ கப் அடிப்பகுதியில் தட்டையான கல்லை ஒட்டினேன். பின்னர் சிரட்டையிருந்து ஒரு பகுதியை எடுத்து அடியில் ஒட்டத் தொடங்கினேன். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் அதனை விற்பனை செய்தேன். அதற்கு நல்லவரவேற்பு கிடைத்தது.

பின்னர் முழுத் தேங்காயை வாங்கி, பருப்பை எடுத்துவிட்டு அதில் குவளை செய்தேன். டீ கப், ஐஸ்கிரீம் கப், ஸ்பூன் ஆகியவற்றைத் தயாரித்தேன். திருமண விழாவில் பரிசாக வழங்கப்படும் சிரட்டை கப்பில் தம்பதியினரின் புகைப்படத்தை ஒட்டிக் கொடுப்பேன். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சிரட்டையை உப்புத்தாள் வைத்து தேய்த்துத் தயார் செய்கிறேன். தேவைப்பட்டால் பெயின்ட் உபயோகிப்பேன். தற்போது சிரட்டையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் பானை, முறம், உரல் போன்றவற்றையும்
தயாரிக்க உள்ளேன்.

இந்தக் கலையை நானே சுயமாகக் கற்றுக் கொண்டேன். வருங்காலங்களில் இதற்கான இயந்திரம் வாங்க உள்ளேன். இயந்திரம் மூலம் சிரட்டையை பாலீஸ் செய்வது உள்பட பல வேலைகளைச் செய்துவிட்டால் மேலும் பல பொருள்களைத் தயாரிக்கஇயலும்'' என்றார் சின்னத்தம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com