பேல்பூரி

கணவன்: என்னோட காலுக்கு சுளுக்கு மருந்தை தேய்ச்சுவிடேன்டிமனைவி: ஏன் நீங்களே தேய்ச்சுக்கக் கூடாதா?கணவன்: அரக்கி தேய்க்கணும்னு டாக்டர் சொன்னார். அதான்.
பேல்பூரி


கண்டது

(மதுரை காளவாசல் பகுதியில் ஒரு காரில்)

அம்மா, அப்பா, ஆசான்

கா.அஞ்சம்மாள்,
தொண்டி.

(வேலூரில் உள்ள காகிதப்பட்டறை பகுதியில் ஒரு பிரியாணி கடையின் பெயர்)

கைதி பிரியாணி ஸ்டால்

வெ.ராம்குமார்,
வேலூர்.

(சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒருதையற்கடையின் பெயர்)

பாலிவுட் ஃபேஷன்ஸ்

த லட்சுமி காந்த்,
சென்னை - 61.

(ராமநாதபுரம் - தேவிபட்டினம் ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு தேநீர்க் கடையின் பெயர்)

இஞ்சி டீ ஸ்டால்


- மு.சுகாரா,
ராமநாதபுரம்.

கேட்டது

(துறையூர் அருகே உள்ள எரகுடியில் ஒரு வீட்டில்)


கணவன்: என்னோட காலுக்கு சுளுக்கு மருந்தை தேய்ச்சுவிடேன்டி
மனைவி: ஏன் நீங்களே தேய்ச்சுக்கக் கூடாதா?
கணவன்: அரக்கி தேய்க்கணும்னு டாக்டர் சொன்னார். அதான்.

ஆர்.இராஜேஸ்வரி,
எரகுடி.

(திருவாரூர் விளமல் கடைவீதியில் அப்பாவும் பிள்ளையும்)


""தம்பி, வா... இன்னிக்கிபண்டிகையில்ல... அம்மா சமைக்க லேட்டாகும். ஒரு வடையும் டீயும் சாப்பிட்டுட்டு போவோம்.
இல்லேன்னா பசி தாங்கமாட்டே''
""வேண்டாம்ப்பா''
""ஏன் தம்பி... பசிக்கலையா?''
""பண்டிகைன்னா காலையிலயிருந்து அம்மா எதுவும் சாப்பிடமாட்டாங்க. சீக்கிரமா சமைச்சிடுவாங்க... இது கூடத் தெரியாம இருக்கியேப்பா''

மு.தனகோபாலன்,
திருவாரூர்.

யோசிக்கிறாங்கப்பா!
 

நேரில் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை
கைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால்,
பேலன்ஸ் தீரும்; பிரச்னை தீராது!

ப. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1.

மைக்ரோ கதை

வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள்.
""நம்ம வீட்டு பீரோ சாவியை வேலைக்காரிகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல?''
""அதைப் போய் வேலைக்காரிகிட்ட கொடுப்பாங்களா?''
""நம்ம வீட்டு பீரோல இருக்கிற நகை, பணம் எல்லாம் வேலைக்காரிகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல?''
""அதையெல்லாம் கொடுக்கக் கூடாது''
""உங்க ஏடிஎம் கார்டை ஏன் வேலைக்காரிகிட்ட கொடுத்துட்டுப் போகல?''
""என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருட்கள், அதையெல்லாம் வேலைக்காரிக்கிட்ட கொடுக்கக் கூடாது''
""அப்போ ஏம்மா என்னை மட்டும் வேலைக்காரிகிட்ட விட்டுட்டுப் போறீங்க ?''

எம்அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்எம்எஸ்

நிம்மதிக்கான இரண்டு வழிகள்:
1. விட்டுக் கொடுங்கள்
2. விட்டு விடுங்கள்

அண்ணா அன்பழகன்,
அந்தணப்பேட்டை.

அப்படீங்களா!


கரோனா தொற்று ஏற்பட்டு உலக அளவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, உலகெங்கும் கிருமிகள், தீநுண்மிகளை அழிக்கும் செயல் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

அடிக்கடி கைகளைக் கழுவுவது சாதாரணமாகிவிட்டது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ûஸ கிருமிநீக்கம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் இன்னொரு நோயாளியை ஏற்றிச் செல்லும்போது கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டியது, தற்போது மிகவும் அவசியமாகும். ஆனால் ஓர் ஆம்புலன்ûஸக் கிருமிநீக்கம் செய்ய குறைந்தது 30 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்கள் வரை ஆகும். ஆம்புலன்ஸின் எல்லாப் பகுதிகளிலும் கிருமி நீக்கம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல. அவசர அவசரமாக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்களை கிருமி நீக்கம் செய்வதற்காகக் காக்க வைப்பதும் சரியல்ல.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும்விதமாக, இங்கிலாந்திலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் எடின்பர்க்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதுவிதமான முறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டிய பகுதிகளை எலக்ட்டோமேக்னடிக் அலைகள், சென்சார்கள், ஆன்டெனாக்கள் ஆகியவற்றின் உதவியுடன் மைக்ரோவேவ் முறையில் வெப்பப்படுத்தி அதன் மூலம் கிருமி நீக்கம் செய்வதே அந்த முறை. இந்தமுறையில் கிருமி நீக்கம் செய்யப்படும் பகுதிகளை வெப்பப்படுத்தும்போது, அவை பாதிக்கப்படாமலிருக்க, சரியான இடைவெளியில் ஆன்டெனா வைக்கப்படுகிறது. அதிக அளவில் கிருமிகள், தீநுண்மிகள் தொற்றியுள்ள பகுதிகளை சென்சார்கள் கண்டுபிடித்துவிடுகின்றன.

கரோனா தீநுண்மித் தொற்றை 60 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் 30 விநாடிகளில் இந்த முறையில் நீக்கிவிட முடிகிறது. ஓர் ஆம்புலன்ûஸ 5 நிமிடங்
களுக்குள் கிருமி நீக்கம் செய்ய முடிகிறது.

இந்த முறையில் கிருமி நீக்கம் செய்ய இதற்கு உரிய கருவிகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அதனால் ஆம்புலன்ஸ் மட்டுமில்லை, பெரிய உணவகங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள் என எங்கு வேண்டுமானாலும் இந்த முறையில் மிக விரைவில் கிருமிநீக்கம் செய்துவிடலாம்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com