பேல்பூரி

யார் கண்டது?புத்தன் வந்து அமர்ந்திருந்தால் புளிய மரமும் போதித்திருக்கலாம்.
பேல்பூரி


கண்டது

(சென்னை மறைமலை நகரில்இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில்எழுதியிருந்த வாசகம்)

தாகம் தீராத மங்கை

ப.வைரவநாதன்,
கூடுவாஞ்சேரி.

(மதுரை கரிமேட்டில் உள்ள ஓர் இல்லத்தின் பெயர்)

மணிபல்லவம்

கா.பசும்பொன்,
மதுரை-16.


(சென்னை மறைமலைநகரில், பிரெளசிங்சென்டர் ஒன்றின் பெயர்)

உலாவல் மையம்

-வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

கேட்டது


(ஈரோட்டில் ஷேர் ஆட்டோவில் இரண்டுபயணிகள்)

""நம்ம ஊர் கரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது போலிருக்கிறதே!''
""எதை வைத்துச் சொல்கிறீர்கள்?''
""பயணிகள் ஷேர் ஆட்டோவிலேயே இப்படி படியில் நின்று கொண்டு பயணிக்கிறார்களே!''

- க. ரவீந்திரன்,
ஈரோடு-2

(சிதம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒருவர்)

""தம்பி செந்தூர் எக்ஸ்பிரஸ்க்கு விழுப்புரம் போக ஒரு டிக்கெட் கொடுங்க''
""ரிசர்வேஷன் தான் பெருசு''
""அப்படின்னா?''
""பெருசு முன்கூட்டியே பணம் கட்டி வாங்கணும்''
""என்னடா கொடுமையா இருக்கு... அரசாங்கத்துக்கு எங்க மேல நம்பிக்கை இல்லாமப் போச்சே''

பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.

யோசிக்கிறாங்கப்பா!


யார் கண்டது?
புத்தன் வந்து அமர்ந்திருந்தால்
புளிய மரமும் போதித்திருக்கலாம்.

கௌந்தி.மு,
சென்னை.


மைக்ரோ கதை

வங்கியில் பணம் எடுக்கச் சென்ற மனைவிக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார், மோகன். அங்கே தன்னுடைய பால்ய நண்பனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் பழைய நினைவுகளை அசை போடத் தொடங்கினார். நண்பன் ஏதோ அவசர வேலையாக வங்கிக்குள் செல்ல வேண்டும் போலிருந்தது தெரிந்தும், மனைவி வரும்வரை டைம் பாஸ் செய்ய வேண்டுமென்று, வம்படியாக இழுத்துப் பிடித்து பேசிக்கொண்டிருந்தார், மோகன்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நண்பன் சற்றுக் கோபமாக உள்ளே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மனைவியிடம், ""ஏன், இவ்வளவு லேட்?'' என்று கோபமாகக் கேட்டார் மோகன்.

மனைவி, ""வெளியே யாரோ கேஷியரோட பழைய நண்பராம்... கேஷியரை பேங்குக்குள்ளே வர விடாம தொணதொணன்னு ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தாராம். கேஷியர் கோபமாகச் சொன்னார். லேட்டானதுக்கு அதான் காரணம்'' என்றாள்.

நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.


எஸ்.எம்.எஸ்.

குழந்தைகள் நடை பழகும் வரை கை கொடுங்கள்;
நடக்கத் தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்!

ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி-1.

அப்படீங்களா!


உலகம் முழுவதும் உள்ள எல்லா பெரிய நகரங்களிலும் இரவு, பகல் போல காட்சியளிக்கிறது. நகரவீதிகள், தெருக்கள் எல்லாவற்றிலும் நிறைய மின்விளக்குகள் நிரம்பியிருப்பதுதான் இதற்குக் காரணம். சாதாரண சோடியம் பல்புகள் இருந்த இடத்தை எல்இடி பல்புகள் பிடித்துவிட்டன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக எல்இடி பல்புகள் கருதப்படுகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ் பெர்க்லி நேஷனல் லேப் எனும் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு மாணவியாக உள்ள லின் மென்ச் என்பவர் தற்போது செய்திருக்கும் ஓர் ஆய்வு, எல்இடி பல்புகளின் வேறுபட்ட முகத்தை நமக்குக் காட்டுகிறது.

எல்இடி பல்புகளில் இருந்து வெளிவரும் ஒளியினால், இரவு நேரப் பூச்சிகள் இறந்து போகின்றனவாம். சாதாரண சோடியம் பல்புகள் எரியும் பகுதிகளில் உள்ள இரவு நேரப் பூச்சிகளின் எண்ணிக்கையில் பாதிதான் எல்இடி பல்புகள் உள்ள பகுதிகளில் இருக்கின்றனவாம். அதுமட்டுமல்ல, இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் முன் கூட்டியே பூத்துவிடுகின்றனவாம். வழக்கமாக உள்ள இரவு - பகல் சுழற்சி வட்டத்தை, இரவைப் பகலாக்கும் இந்த எல்இடி பல்புகளின் வெளிச்சம் மாற்றி அமைத்துவிடுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார் லின் மென்ச்.

மரங்கள், செடிகளின் இயல்பான தன்மைகள் எல்இடி பல்பின் ஒளியால் மாறுபடுவதாகச் சொல்கிறார் அவர்.

பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது, காய்ப்பது, கனியாவது, மரத்தின் இலைகள் சருகாவது எல்லாம் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப நடந்து வந்தது, எல்இடி வெளிச்ச வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நகரங்களில் மட்டும் இவை மாறிவிடுவதை அவர் கண்டுபிடித்திருக்கிறார். வசந்த காலத்தில் பச்சைப் பசேல் என்று இலைகள் மாறுவது கிராமப்புறங்களை விட எல்இடி விளக்குகள் உள்ள நகர்ப்புறங்களில் ஆறு நாட்கள் முன்னதாகவே நடந்துவிடுகிறதாம்.

காலநிலை மாற்றங்கள் நிகழ, காற்றில் கார்பன் டை ஆக்ûஸடு அதிகமாவது ஒரு காரணம் என்று நமக்குத் தெரியும். அதில் இப்போது எல்இடி பல்பும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com