முகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்
சிரி... சிரி...
By DIN | Published On : 19th December 2021 06:00 AM | Last Updated : 19th December 2021 06:00 AM | அ+அ அ- |

""கண் டாக்டர் காசுல குறியா இருக்கார்னு எப்படிச் சொல்றே? ''
""பேஷண்டோட கண் கட்டை அவிழ்த்ததும் ஆபரேஷனுக்கான பில்லைக் காட்டி படிக்க முடியுதான்னு கேக்குறாரே..?''
அப்ரோஸ் பானு,
சென்னை-126.
""சம்பளத்தைக் கவர்ல போட்டுக் கொடுக்காதீங்க சார்''
""ஏன்யா ?''
""உங்ககிட்டயே நான் சம்திங் வாங்குற மாதிரி இருக்கு''
புது நிர்வாகி: ஏம்பா பியூன்... நம்ம ஹெட்கிளார்க் கோபால் சாமி எப்படி?
பியூன்: ரொம்பத் தங்கமான ஆள் சார்!
ஆபீசுக்கு வந்தா "தானுண்டு... தன் தூக்கம் உண்டு'ன்னு இருந்துட்டுப் போவாரு! யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டாரு சார்.
எம். அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
""படத்துக்கு, மாணவர்கள் யாருமே வரலையே... ஏன்?''
""இது "படமல்ல... பாடம்'னு விளம்பரப்படுத்தினா எப்படி வருவாங்க..?''
""அவர் டுபாகூர் டாக்டர் தான்னு எப்படி உறுதியா சொல்றே?''
""கால் வீக்கம் மறைய, வேட்டியைத் தழையத் தழைய கட்டிக்கன்னு சொல்றாரே!''
""வங்கியில் பணம் கட்ட வரிசையில நிக்கறவங்க அந்த பிச்சைக்காரனை முதலில் போய் கட்டச் சொல்றாங்களே... ஏன்?''
""வரிசையில் நிற்கும் போதே அவன் பிச்சை கேக்குறானாம்''
வி. ரேவதி,
தஞ்சை