ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கம்ப்யூட்டர் வேலை... கழுத்தில் வலி!

என் வயது 31. ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எப்போதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வதால், கழுத்தில் ஏற்படும் வலியை சமாளிப்பதற்காக, தலையை மேலும் கீழும் ஆட்டுவதுமாகவும், பக்கவாட்டில்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கம்ப்யூட்டர் வேலை... கழுத்தில் வலி!

என் வயது 31. ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எப்போதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வதால், கழுத்தில் ஏற்படும் வலியை சமாளிப்பதற்காக, தலையை மேலும் கீழும் ஆட்டுவதுமாகவும், பக்கவாட்டில் கழுத்தை மடக்குவதாகவும், இருப்பதால் வலி அதிகமாகி, ஸ்கேன் செய்து பார்த்ததில் இஉதயஐஇஅக நடஞசஈவகஞநஐந என்று வந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத மருத்துவம்உள்ளதா?

கணேஷ்,
கோவிலம்பாக்கம்,
சென்னை.

கழுத்துத் தண்டுவட வில்லையில் ஏற்படும் தொடர் அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தவறானவை. கழுத்து வலியைத் தவிர்ப்பதற்காக, பலரும் தலையை வேகமாகத் திருப்புவதையும், மேலும் கீழும் ஆட்டுவதையும் நிறைய இடங்களில் பார்க்க நேரிடுகிறது. இதனால் வலி குறைகிறதோ இல்லையோ, அதுவே தண்டுவட வில்லையின் நழுவலுக்கும், தேய்மானத்துக்கும் வழி வகுக்கின்றன. வலி வந்தவுடன்கணினி முன் அமர்ந்திருக்காமல், சற்றே எழுந்து உலாவலாம். பின்கழுத்துத் தண்டுவடப்
பகுதியை உள்ளங்கையால் பிடித்துவிடலாம்.

உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சூடுபறக்கத் தேய்த்துவிட்டு, பின் கழுத்துத் தண்டுவடத்தின் மீது வைக்கலாம். வலி நிவாரணிக் களிம்பை இதமாகத் தடவிவிடலாம்.

ஆயுர்வேதத்தில் முதுகலைப்பட்டம் பெறுவதற்காக சென்னையில் பயின்று மாணவ, மாணவியர் நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மூலிகை மருந்துகளின் மூலமாக, இதற்கான தீர்வை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்க முடியுமா என்ற அவர்களுடைய ஆராய்ச்சியானது நல்ல பலனைத் தந்து வருகிறது.

நெய்ப்பு, குளிர்ச்சி, நிலைப்பு போன்ற குணங்களைக் கொண்ட சித்தாமுட்டி எனும் செடியின் வேரைக் கொண்டு கஷாயம் காய்ச்சி, அதே மூலிகை மருந்தின் வேரை கல்கம் எனும் நீர் விட்டு அரைத்து உருண்டை செய்து, நெய்யுடன் அவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் " பலாமூலக்ருதம்' எனும் நெய் மருந்தை காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு, அதன் மேல் சிறிது சூடான தண்ணீர் அருந்துவதால், நெய் மருந்து நன்கு செரிமானமாகி, அதன் குணங்களும் செயல்களும் விரைவாக கழுத்துத் தண்டுவட குருத்து எலும்பு மற்றும் வில்லைகளைச் சென்றடைந்து, தேய்மானத்தைத் தடுத்து உதவுகிறது. மேலும் வில்லைகளுக்குத் தேவையான புஷ்டியை அது ஏற்படுத்துவதால், நல்ல வலி நிவாரணியாகவும் உதவுகிறது.

கழுத்துத் தண்டுவட வில்லையின் வெளிப்புறத்தில் ஊற வைக்கக் கூடிய மூலிகைத் தைலமும் தயாரித்து இலவசமாக முதல் மூன்று வாரங்களுக்கு வழங்குகிறார்கள். நல்லெண்ணெய்யில் கருப்பு உளுந்தினால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் கலந்து, உருண்டையாகவும் உருட்டி எடுக்கப்பட்ட கருப்பு உளுந்து மாவுடன் சேர்த்தரைக்கப்பட்ட இந்துப்பை, நல்லெண்ணெய், கஷாயம், கல்க உருண்டை எனக் கலந்து தைல பதத்தில் தயாரித்து எடுக்கப்படும் மாஷûஸந்தவ தைலம் எனும் இம்மருந்தை வெதுவெதுப்பாக பின் கழுத்தில் வலி ஏற்பட்டுள்ள பகுதியில் பஞ்சினால் முக்கி, சுமார் 45 நிமிடங்கள் வரை ஊறச் செய்வதால், உளுந்தின் நெய்ப்பும், சூடும், கனமும் ஒருங்கே சேர்ந்து வில்லை மற்றும் தண்டுவட எலும்பு நரம்புகளை வலுப்படுத்தி வலியை நன்கு போக்கிவிடும்.

2 5 - 60 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ஆண் - பெண் பேதமில்லை. மூன்று வருடங்களுக்கு மேல் இந்த உபாதையால் துன்பப்படுபவர்கள், இந்த ஆராய்ச்சிக்கு ஏற்கப்படுவதில்லை. மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு மாதம் மட்டுமே மருந்துகளை வழங்கி, ஆராய்ச்சியின் முடிவை அறிந்து கொள்ளும் சிறப்பான இந்த மருந்துகளை நீங்கள் நேரில் சென்று பதிவு செய்த பிறகே வாங்கிப் பயன்படுத்த முடியும். சித்தாமுட்டிவேரின் உள் பிரயோகம் (நெய் வடிவில்), கருப்பு உளுந்து, இந்துப்பு ஆகியவற்றின் வெளிப் பிரயோகம் (நல்லெண்ணெய் வடிவில்) எனும் இந்த மருத்துவ ஆராய்ச்சி நல்ல பலனைத் தரும் என்று நம்பலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com