பேல்பூரி 

ஒருமணி நேர காய்கறி கடை 
பேல்பூரி 


கண்டது

(வேதாரண்யம் - வெள்ளப்பள்ளம் சாலையில் ஒரு காய்கறி கடையின் பெயர்)

ஒருமணி நேர காய்கறி கடை 

 -ந.விஜய்ஆனந்த்,
தோப்புத்துறை.


(நாகை புறநகர் பகுதியில் நடமாடும் காய்கனி வியாபாரம் செய்யும் வாகனத்தில்)

 "சாயம்' போகாத நம் விவ"சாயம்'

 
வை.நித்யபுவனா,
நாகப்பட்டினம்- 1
 

(கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

அழகுபாவி 

ஆர். பூஜா,
சென்னை - 1.

கேட்டது


(நெய்வேலி பூங்காவில் நடை பயிற்சியின் போது இருவர்)


""என்ன தான் தொல்லையா இருந்தாலும், நல்லா தெரிஞ்சவங்களை இரண்டு நாள் பார்க்க முடியலேனா மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு!''
""ஊருக்கு போயிருக்கும் உங்க மனைவியை சொல்றீங்களா? கவலைப்படாதீங்க! வந்திருவாங்க''
""அட... சூரியனைச் சொல்றேன் சார்! நான் சந்தோசமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா?''


கி.ரவிக்குமார்,
நெய்வேலி - 607803.

(அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் பிரிவு வளாகத்தில் இரு மாணவர்கள்)


""என்ன மச்சி பிரியாணி சாப்பிடலாமா?''
""வேண்டாம்டா இன்னைக்கு வெள்ளிக்கிழமை''
""அது எப்படிடா என் கைல காசு இல்லாம உன் கையில காசு இருக்கும் போது மட்டும் நாள், கிழமை எல்லாம் பார்க்குற?''


பொன்.பாலாஜி,
அண்ணாமலைநகர் .

யோசிக்கிறாங்கப்பா!

பூமியில் மட்டும்தான் விதைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறது...
பறக்கும்போது எந்த பூந்தொட்டிகளிலும் எச்சம் இடாத பறவைகளுக்கு. 


கௌந்தி.மு,
சென்னை-119. 

மைக்ரோ கதை


வீட்டில் கணவன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அவர் தலையில் மனைவி "நங்'என்று கரண்டியால் ஒன்று போட்டாள்.

கோபப்பட்ட அவர், ""இப்போ எதுக்கு அடிக்கிற என்னை?'' என்று கேட்டார்.

அதற்கு மனைவி, "" உங்க பாக்கெட்ல ஒரு துண்டு பேப்பர் இருந்தது. அதில் லைலா என்று பெண்ணின் பெயர் இருந்தது'' என்றாள்.

கலவரமான அந்த கணவன், ""  நான் குதிரை பந்தயத்துக்கு போனேனே நினைவில்லையா உனக்கு? என் பந்தய குதிரையின் பெயர் தான் லைலா'' என்று கூறினார்.

ஒரு மாதிரியாக "லுக்'  விட்டபடியே மனைவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
மூன்று நாளைக்குப் பிறகு கணவன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, "நங்' என்று கரண்டி அவரின் தலையைப் பதம் பார்த்தது. திரும்பி பார்த்தால் மனைவி கோபத்தோடு அங்கு நிற்கிறாள். 

தலையைத் தடவியபடி, ""இப்போ எதுக்கு அடிக்கிறாய்?'' என்று அந்த கணவன் 
கேட்கிறார்.

அதற்கு மனைவியிடம் இருந்து வந்த பதில்: ""உன்னுடைய குதிரை கால் பண்ணிக் கொண்டிருக்கிறது'' கணவரின் முகத்தில் திகில் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன.

எம் ஏ நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி. 


எஸ்.எம்.எஸ்.


முன்னேற்றம் என்பது விதியின் பலனல்ல...
உழைப்பின் ஊதியம்.

ஜி.அழகிரிவேல்,  
ஒதியடிக்காடு.

அப்படீங்களா!


வாகனங்கள் அதிகமாகிவிட்டதால்,  அவற்றில் இருந்து வெளிவரும் புகையால் காற்றில் கார்பன் டை ஆக்ûஸடு கலப்பது அதிகமாகிவிட்டது.   இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மின் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஸ்வீடன் இந்த முயற்சியில் பிறநாடுகளை விட,  ஓர் அடி முன் சென்று கொண்டு இருக்கிறது.  

கனரக  மின்சார வாகனம் ஒன்றை கடந்த மாதம் ஸ்வீடன் சாலையில் இயக்கி சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.  ஸ்வீடனில் உள்ள காட்லேண்ட் தீவின் விமானநிலையத்தில் இருந்து விஸ்பி பகுதி வரை - 1.4 கி.மீ. தூரம் -  இந்தச் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.  இதில் என்ன புதுமை என்றால்,  இந்த மின்சார வாகனத்தை மின்னேற்றம் செய்ய எங்கேயும் நிறுத்த வேண்டியதில்லை. 

சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே மின்னேற்றம் ஆகும்படி சாலையை அமைத்திருக்கிறார்கள். ஸ்வீடனில் உள்ள  "ஸ்மார்ட்லேண்ட் காட்லேண்ட்' என்ற நிறுவனத்தினர் மின்சார சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கு ஸ்வீடன் அரசு நிதி உதவி அளித்திருக்கிறது. 

செப்புக் கம்பிகள் புதைக்கப்பட்டுள்ள சாலையில் உருவாகும் மின்சாரத்தை, இந்த மின்சார வாகனத்தின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருவி, வாகனம் ஓடிக் கொண்டு இருக்கும்போதே ஈர்த்துக் கொள்ளும்.  80 கி.மீ. வேகத்தில் மின்சார வாகனம் செல்லும்போது கூட 70 கிலோவாட் மின்சாரத்தை உறிஞ்சும் திறன் படைத்தது இந்தக் கருவி.

இதுபோன்ற மின்சார நெடுஞ்சாலைகளை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் அளவுக்கு  இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமைக்க ஸ்வீடன் அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இதற்காக இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஸ்வீடனுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com