கீமோதெரபியுடன் கைகோர்க்கும் புதிய தொழில்நுட்பம்!

புற்றுநோய்க்கான மருத்துவத்தில் கீமோதெரபிக்கு முக்கிய இடமுண்டு.
கீமோதெரபியுடன் கைகோர்க்கும் புதிய தொழில்நுட்பம்!

புற்றுநோய்க்கான மருத்துவத்தில் கீமோதெரபிக்கு முக்கிய இடமுண்டு.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கீமோதெரபி மருத்துவத்துடன் புதிய முறை ஒன்றை இணைத்து ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். அது புற்றுநோயைக் குணமாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

டோக்சோருபிசின் என்ற கீமோதெரபி மருந்துடன் காந்தநானோ பொருள்களை இணைத்து வெப்பப்படுத்தும் முறையினால், புற்றுநோய் குணமாகும் திறன் 34 சதவீதம்அதிகரித்திருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

புற்றுநோய்க் கட்டி உள்ள உடலின் வெளிப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாத காந்தமண்டலத்தை முதலில் உருவாக்குகிறார்கள். மிக நுண்மையான நானோ காந்த பொருள்கள் தானாகவே புற்றுநோய்க் கட்டியில் உள்ள புற்றுநோய் செல்களில் போய் ஒட்டிக் கொள்கின்றன. இந்த நுண்மையான காந்தப் பொருள்களில் கீமோதெரபி மருந்தான டோக்சோருபிசினை இணைத்து அனுப்பிவிடுகிறார்கள். புற்றுநோய் செல்களில் ஒட்டிக் கொண்ட டோக்சோருபிசின் கலந்த நுண்மையான காந்தப் பொருள்கள் தாமாகவே வெப்பமடையத் தொடங்குகின்றன. புற்றுநோய் செல்களை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பமடையச் செய்கின்றன.

இந்த வெப்பமும், டோக்சோருபிசின் மருந்தும் சேர்ந்து 98 சதவீதம் மூளைப்புற்றுநோய் செல்களை 48 மணி நேரத்தில் அழித்துவிடுகின்றன. வெப்பமில்லாமல் கீமோதெரபி மருந்து புற்றுநோய் செல்களில் தடவப்பட்டால், வெறும் 73 சதவீதம் செல்களே அழிக்கப்படுகின்றன.

கீமோதெரபி செய்யப்படும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் இந்த காந்தமண்டல இணைப்புச் சிகிச்சையால் குறைந்துவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சி அளவில் உள்ள இந்த மருத்துவமுறை பற்றிய தகவல்களை பிரிட்டனிலிருந்து வெளிவரக் கூடிய "தி ஜர்னல் ஆஃப் மெட்டீரியல்ஸ் கெமிஸ்ட்ரி பி' என்ற அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com