பூங்கா புதுசு

படங்களில்  காண்பது  ஒரு பூங்கா என்றால் வெளிநாடுகளில்  பூங்கா இப்படித்தான் இருக்கும் என்று பதில் வரும்.
பூங்கா புதுசு


படங்களில்  காண்பது  ஒரு பூங்கா என்றால் வெளிநாடுகளில்  பூங்கா இப்படித்தான் இருக்கும் என்று பதில் வரும். எந்த நாட்டில் இந்தப் பூங்கா இருக்கிறது  என்று கேட்க வைக்கும் அளவிற்கு அழகோடு நேர்த்தியாக இந்த பூங்கா இருக்கிறது - என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை.

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பூங்காவை,   மாற்றுத் திறனாளிகள் உள்பட  பொது மக்களும் பயன்படுத்தும் விதத்தில்  கவர்ச்சிகரமாக  உருவாக்கியிருக்கிறார்கள். 

வேறு எந்த பூங்காவிலும்  இல்லாத  வசதி  இந்தப் பூங்காவில் உள்ளது.  உடல் பயிற்சி மையம்,  பூப்பந்தாட்ட  அரங்கு இரண்டையும் இந்தப் பூங்கா  கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான  விளையாட்டு வசதியும்    உண்டு. 

கேரளம் வடகராவுக்குப் பக்கத்தில் இருக்கும் "காரக்காட்'  கிராமத்திற்கு இந்த நவீன பூங்கா சொந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com