திரைக்கதிர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "டாக்டர்'.
திரைக்கதிர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "டாக்டர்'. இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் படக் குழு ஏமாற்றம் அடைந்தது. இதனிடையே  இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்தி பரவியதைத் தொடர்ந்து,  திரையரங்கில் தான் படம்  வெளியாகும் என்று படக் குழு உறுதியளித்துள்ளது.

---------------------------------------------------------------------------------

மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த "பேட்ட' படம் மூலம் அறிமுகமானார். அடுத்து "மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் உருவாகும் வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில்  கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முயற்சியை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். ""கல்வி கற்கவும், அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவும் நான் உதவ விரும்புகிறேன். 

கேரளாவில் வயநாட்டின் இந்தப் பழங்குடியினச் சிறுவர்கள்  தொடர்ந்து படிக்க ஒரே வழி ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. அதை ஏற்படுத்தித் தருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------------------

ன்னட நடிகர் யாஷ் "கே.ஜி.எப்'  படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். முதல் பாகத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் தமிழ், தெலுங்கு முன்னணி நடிகையான தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இதற்காக பெருந்தொகை சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. யாஷ் அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். யாஷ் அந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.  அது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது.

---------------------------------------------------------------------------------

மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய்யின் 65- ஆவது படம் வேகமாக உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை  படக்குழு வெளியிட்டது. அதில் விஜய்யின் பெயரிடாத இப்படத்திற்கு "பீஸ்ட்' என வித்தியாசமான பெயரிடப்பட்டுள்ளது.  ரசிகர்கள் இந்த போஸ்டரைக் கொண்டாடினர்.  இதைத்தொடர்ந்து ரசிகர்கள் காமன் டிபி வைத்து சமூக
வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கும் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

---------------------------------------------------------------------------------

வெற்றிமாறன் இயக்கத்தில் "பொல்லாதவன்', "ஆடுகளம்' படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ். கதிரேசன். இதில் "ஆடுகளம்' படம்  6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

 இதேபோல், இயக்குநர் வெற்றிமாறன், "கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி' தயாரிப்பு நிறுவனம் சார்பில், "உதயம்', "காக்காமுட்டை', "விசாரணை', "வட சென்னை' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்."காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. "விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகாடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு "அதிகாரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வெற்றிமாறன் கதை , திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். துரை செந்தில் குமார் இயக்குகிறார்.

---------------------------------------------------------------------------------

ப்பர் டூப்பர் ஹிட்டடித்த "ரங்குஸ்தலம்' வெற்றிக்கு அடுத்தபடியாய் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் "புஷ்பா' படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர் சுகுமார். படத்தைப் பார்த்து ரிலீஸூக்கு முன்னரே பார்ட் - 2 எடுக்கவும் திட்டமிட்டு படப்பிடிப்பை தொடர்கிறார் சுகுமார். செம்மர தொழிலில் கொடிகட்டிப் பறந்த புஷ்பராஜ் என்கிற தமிழரின்
கதையாம் இது. படத்தின் முன்னோட்டமே பெரும் வரவேற்பைப் கொடுக்க, கோடிகளைக் கொட்டிக் கொடுத்துத் தமிழ்நாட்டு விநியோக உரிமைக்குப் போட்டிபோடுகிறார்கள்.

---------------------------------------------------------------------------------

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் ஹிந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டியில்... 

""ஆணாதிக்கம் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையைப் பற்றி எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும். நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர். எனக்கு சமைக்கத் தெரியாது. சிறு வயதில் இருந்தே எனது அம்மா, "ஒழுங்காகச் சமையலைக் கற்றுக்கொள்' என்று சொல்வார்கள். நான் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் சமையல் செய்ய தெரிந்தவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com