பேல்பூரி 

இல்லாதவர்களுக்கும்இயலாதவர்களுக்கும்இலவசம்.
பேல்பூரி 

கண்டது

(கும்பகோணம்பிள்ளையார் கோயில் அருகேஓர் ஆட்டோவில்)

இல்லாதவர்களுக்கும்
இயலாதவர்களுக்கும்
இலவசம்.

மு.தனகோபாலன்,
திருவாரூர்.

(கோயம்புத்தூரில் உள்ளஓர் உணவகத்தின் பெயர்)


அனுபவி - உண்டு மகிழ்.

-எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.

(பென்னாகரம் அருகே உள்ளஓர் ஊரின் பெயர்)


நாக மரை

ந.பிறைசூடன், தருமபுரி.

(பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள ஒரு தெருவின் பெயர்)

பொது நலத் தெரு

ஜே.கமலம்,
திருநெல்வேலி- 7

கேட்டது

(தஞ்சாவூர் - ஓர் ஏடிஎம்சென்டரில் இருவர்)

""ஹலோ... என்ன பண்றீங்க? ஒன்னு நீங்க எடுங்க, இல்லே என்னை எடுக்கவுடுங்க...
நேரமாகுதுல்லே?''
""அதெப்படி... என் பணத்தை நீங்கஎடுப்பீங்க?''
""ஆமா... பிளான் பண்ணி கொள்ளையடிக்க வந்திருக்கேன்... யோவ்... என் பணத்தைஎடுக்கணும்ன்னு சொன்னேன்... தள்ளுய்யா''

பா.து. பிரகாஷ்,
தஞ்சாவூர்-613 001


(நெய்வேலி மெயின் பஜாரில் செல்போன்ரிப்பேர் கடை வாசலில் நண்பர்கள்)


""நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்'னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க!''
""எப்படிச் சொல்ற?''
""வீட்டில் ஒரு ரூம்ல, ஆன் லைன் ஸ்கூல் நடக்குது! இன்னொரு ரூம்ல காலேஜ் நடக்குது! இன்னொரு ரூம்ல ஆபீஸ் நடக்குது! உள்ளே (கிச்சன்) கேண்டீன் நடக்குது! இப்போ சொல்லுங்க! ஒவ்வொரு வீடும் ஒரு பல்கலைக்கழகம் தானே!''

இரா. கிருத்திக்குமார்,
நெய்வேலி - 607803.

யோசிக்கிறாங்கப்பா!


வாழ்க்கையைப் பந்தயமாகப்
பார்ப்பவர்கள் பயம் கொள்கிறார்கள்.
வாழ்க்கையைப் பயணமாகப் பார்ப்பவர்கள்
வாழ்ந்து ரசிக்கிறார்கள்.

- கா.அஞ்சம்மாள்,
ராமநாதபுரம்.

மைக்ரோ கதை

அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சோமு நோய்வாய்ப்பட்டார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சென்று கடைசியில் ஒரு மருத்துவர் அவருக்கு சிகிச்சை செய்து குணப்படுத்தினார்.

குணமாகி வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த சோமுவிடம் அவருடைய மனைவி,
""நீங்க ஒரு வெட்னரி டாக்டர் கிட்டபோயிருந்தா எப்பவோ குணமாகி இருக்கும்'' என்றாள். அதிர்ச்சி அடைந்த அவர்,
"உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா? என்று கேட்டார்.

அதற்கு அந்த மனைவி சொன்னாள்:

""காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி "லபக் லபக்'ன்னு சாப்பிட்டுட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக ஆபீசுக்கு ஓடி, அங்கே மாடு மாதிரி உழைக்கிறீங்க. உங்களுக்கு கீழே உள்ளவங்க கிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. மேலே உள்ளவங்க கிட்ட பூனை மாதிரி பம்முறீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்ககிட்ட நாய் மாதிரி குரைக்கிறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்குறீங்க. அதனால தான் சொல்றேன். நீங்க வெட்னரி டாக்டர் கிட்ட போயிருந்தா உங்க நோயைச் சீக்கிரமே அவர் கண்டுபிடிச்சு இருப்பாருன்னு'' என்ன சொல்வதென்று புரியாமல் சோமு விழிக்க, ""என்ன ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க? இனிமேலாவது மனுஷன் மாதிரி வாழக் கத்துக்கங்க... நோய் உங்களை அண்டாது'' என்றாள் மனைவி.

எம் அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்.எம்.எஸ்.

உங்க கிட்ட தான் சொல்றேன் என்பது உண்மை.
உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் என்பது பொய்.

பி.கோபி,
கிருஷ்ணகிரி-1

அப்படீங்களா!


இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயம். அணியாமல் செல்வது இன்று பலரின் வழக்கமாக இருக்கிறது.

லுமோஸ் ஹெல்மெட் என்ற இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றால், ஹெல்மெட்டின் முன்பகுதியில் பளிச்சென்று வெண்ணிற எல்ஈடி ஒளி வரும். ஹெல்மெட்டின் பின்புறத்தில் சிவப்பு வண்ணத்தில் எல்ஈடி பல்ப் ஒளிரும்.

இருசக்கர வாகனத்தின் கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ள ப்ளூடூத் கண்ட்ரோல் மூலமாக வெளிவரும் சிக்னலைப் பெற்று, வாகனம் இடதுபுறம் திரும்பும்போது ஹெல்மெட்டின் இடதுபுறத்தில் சிக்னல் ஒளியும், வலதுபுறம் வாகனம் திரும்பும்போது ஹெல்மெட்டின் வலதுபுறத்தில் சிக்னல் ஒளியும் வரும். இருசக்கர வாகனத்தில் உள்ள சிக்னலை இயக்காமல், கைகளையும் காட்டாமல் சட்டென்று திரும்பும் வழக்க முடையவர்களுக்கு இந்த ஹெல்மெட் மிகவும் பாதுகாப்பானது.

இந்த ஹெல்மெட்டுடன் தரப்படுகிற செயலியை உங்களுடைய செல்போனில் இணைத்துவிட்டால், நீங்கள் வாகனத்தில் பிரேக் போடும்போது ஹெல்மெட்டில் அதற்கான பல்ப் எரியும்.

இந்த ஹெல்மெட்டை ஒருமுறை சார்ஜ்செய்தால், இரண்டு மணி நேரங்கள் வேலை செய்யும்.

இந்த ஹெல்மெட்டில் மொத்தம் 60 எல்ஈடி பல்புகள் உள்ளன. இவ்வளவு எல்ஈடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டின் எடை 500 கிராமுக்கும் குறைவுதான்!

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com