பேல்பூரி

First ride may be nervousFast ride leads to Heaven
பேல்பூரி


கண்டது


(திருச்சியில் ஓர் இருசக்கர வாகனத்தில்)


எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(தருமபுரி தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிதகவல் பலகையில்)

First ride may be nervous
Fast ride leads to Heaven

ப.நரசிம்மன், தருமபுரி- 1

(திருத்துறைப்பூண்டியில் ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில்)

வெறுக்க முடியாத ஒருவரால்தான்...
மறக்க முடியாத வலியைத் தர முடியும்!

-மருத.வடுகநாதன்,
வேதாரண்யம்.

(தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சியில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

ஆராய்ச்சி பட்டி

மு. மதிவாணன், அரூர்.

கேட்டது


(நாகர்கோவில் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் கடைக்காரரும் கிராமத்துவாடிக்கையாளரும்)

""தம்பி... நெம்பரை ஈசியா மனசுல வைக்கற மாதிரி "சிம்' ஒண்ணு குடேன்''
""இந்தாங்க... பேன்ஸி நெம்பர்''
""என்னது பேன்ஸி நெம்பரா...அப்படின்னா''
""நயன் ஜீரோ...நயன் ஜீரோனு வரிசையா
வருதுல...அதுதான் பேன்ஸி''
இதை விட பேன்ஸி நெம்பரா, பத்து நெம்பரும்,
ஜீரோ ...ஜீரோனு வர்ற மாதிரி "சிம்' இருந்தால் குடேன்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

(சிதம்பரம் கடைத்தெருவில் ஓர் இளைஞன் தன் செல்பேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு பேசியபோது...)


""மேம், கேட்குதா மேம் ? கோபி பேசறேன். ஒரு டவுட்''
""எஸ்''
""மேம், கேட்குதா மேம். கோபி பேசறேன். ஒரு டவுட்''
""நல்லா கேட்குது கோபி. என்ன டவுட்?''
""தேங்க்ஸ் மேம். நான் பேசினா கேட்குதா
இல்லையான்னு, டவுட் இருந்துச்சு மேம்''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்-1.


யோசிக்கிறாங்கப்பா!


நேர் வழி, குறுக்கு வழி என்பது
பாதையின் நீளத்தை மட்டுமல்ல...
பயணிப்பவரின் மனநிலையையும் பொருத்தது.


பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.


மைக்ரோ கதை


ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அவரை அழைத்துக் கொண்டு வர ஒரு குதிரைவண்டிக்காரர் போயிருந்தார். அன்று ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைந்து போய்விட்டார்கள். குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசுவதற்காக நிறையத் தயார் பண்ணிக் கொண்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரை வண்டிக்காரருக்காக மட்டும் பிரசங்கம் செய்யவும் மனதில்லை.

""என்னப்பா பண்ணலாம்?'' என்று கேட்டார்.

""அய்யா! நான் குதிரைவண்டிக்காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுமுங்க. நான் நாலு குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுன்னு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்'' என்றான்.

"பளார்' என்று அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு "சபாஷ்' போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாகப் போட்டுத் தாக்கி பிரமாதப்படுத்திவிட்டார் குரு. பிரசங்கம் முடிந்தது.

""எப்படிப்பா இருந்தது என் பேச்சு?' என்று அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.

""அய்யா... நான் குதிரைவண்டிக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வைப்பேன். நாலு குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்'' என்றான்.

எம்.ஏ. ராஜா,
திருச்சி.

எஸ்.எம்.எஸ்.

கற்றுக் கொள்வதை நிறுத்தாதீர்கள்.
ஏனென்றால், வாழ்க்கை கற்றுக் கொடுப்பதை
எப்போதும் நிறுத்துவதில்லை!

வாசுதேவன்,
பெங்களூரு-67.

அப்படீங்களா!

கரோனா தொற்றுக்குப் பிறகு உலகெங்கும் கிருமிகளை அழிப்பது, தீ நுண்மிகளை அழிப்பது போன்ற வேலைகள் பன்மடங்கு பெருகியுள்ளன. குடிக்கும் தண்ணீரைத் தூய்மைப்படுத்த அதை கொதிக்க வைப்பதை நாம் நீண்ட நாள்களாகச் செய்து கொண்டிருக்கிறோம்.

"கிரேஸிகேப்' என்ற பாட்டிலில் பொருத்தக் கூடிய மூடி 60 விநாடிகளில் பாட்டிலிலுள்ள தண்ணீரைத் தூய்மைப்படுத்திவிடுகிறது. அதற்கு அந்த மூடியின் மேல் உள்ள பட்டனை அழுத்தினால் போதும்.

அந்த மூடியில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் தண்ணீரைத் தூய்மையாக்கி விடுகின்றன.

இந்த மூடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள்கள் வரை தன் பணியைச் செய்யும். தூய்மைப்படுத்தும்போது அதைத் தெரிவிக்கும் விதமாக வெளிச்சம் மூடியின் மேல்பகுதியில் இருந்து வெளிப்படும்.

வெளியூர்ப் பயணங்களின்போது இந்த தண்ணீரைத் தூய்மையாக்கும் மூடி பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஜே.,
சென்னை -58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com