பேல்பூரி 

நாட்டு மருத்துவம்: ரத்த கொதிப்பு (பிளட் பிரஷர்) அதிகமாக இருந்தால், மனதுக்கு பிடித்தவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.
பேல்பூரி 

கண்டது


(மதுரை கீழமாசி வீதியிலுள்ள நாட்டு மருந்து கடையில்)

நாட்டு மருத்துவம்: ரத்த கொதிப்பு (பிளட் பிரஷர்) அதிகமாக இருந்தால், மனதுக்கு பிடித்தவர்களோடு மனம் விட்டு பேசுங்கள்.

ந. பிரபுராஜா,
மதுரை -2

(சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு சலவை சேவை வழங்கும் கடையின் பெயர்)

ஆன்க்ஷக்ஷப்ங் ஏர்ன்ள்ங்

த லட்சுமி காந்த்,
சென்னை - 61.

(வேதாரண்யம் கடைத்தெருவில் லோடு ஆட்டோ ஒன்றில்)

இல்லாதவனுக்கு எது கிடைத்தாலும் அதிசயம்!
இருப்பவனுக்கு எது கிடைத்தாலும் அலட்சியம்!!

-வ.வெற்றிச்செல்வி,
வேதாரண்யம்.

கேட்டது


(நாகர்கோவில் கோட்டார்பகுதியில் தெரு ஒன்றில் இருவர்)

""என்ன மாப்ள நாய் வளர்க்கிறே? ஒவ்வொரு வீட்டு நாயும், வளர்க்கிறவரை தூரத்தில் கண்டதும், எப்படி வேகமா பாய்ந்து வரும் தெரியுமா ? உன் நாயும் இருக்கே... இப்படி மெதுவா வந்தும் வராததுவுமா இருக்கே''
""இது "2ஜி நாய்' மச்சி... மெதுவாகத்தான் வரும்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

( சிதம்பரம் கீழவீதியில் இரு பெண்கள்)

"" உன் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு''
"" எது தலைமுடியை விரிச்சிப் போட்டுகிட்டு திரியுறது ஸ்டைலா? பின்னுறதுக்கு அலுப்பு டீ... இது''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம் -1.

(திருவாரூர் கீழ வீதியில் கணவனும் மனைவியும்)

""உங்கம்மாவுக்கு நல்ல டார்க் கலர்ல மாஸ்க் வாங்கிட்டு, எனக்கு லைட் கலர்ல வாங்கியிருக்கிறீங்க. நாலு பேரு பாத்தா என்ன நெனைப்பாங்க?''

""நான் என்ன உன் மாமியாருக்கு வைரநெக்லசும் உனக்கு கவரிங் நகையுமா வாங்கிட்டு வந்தேன். கவுண்டமணி ரேஞ்சுக்கு என்ன புலம்ப உடுறியே... உள்ள போ''

எஸ். பழனிவேல்,
திருவாரூர்.

யோசிக்கிறாங்கப்பா!


உலகிலேயே அதிக பொய்களைக் கொண்ட இரண்டு லெட்டர்கள்
1. லவ் லெட்டர்
2. லீவ் லெட்டர்

நந்தினி,
சென்னை-110.

மைக்ரோ கதை

கெளரியின் மாமியார் இறந்து முப்பது நாள்கள் முடிந்துவிட்டன. வீட்டில் ஒவ்வொரு செலவுக்கும் ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவழிப்பதில் மிகவும் கெட்டிக்காரி கெளரி.
அவள் மாமியாரின் கடைசி சில வருடங்களில் அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே மாமியாரின் மருத்துவச் செலவுக்கு என மாதம்
தோறும் ஐநூறு ரூபாய் குடும்ப பட்ஜெட்டில் ஒதுக்கி வைப்பாள் கெளரி.
தனது அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவள் போட்டிருந்த மாத பட்ஜெட்டைப் பார்த்த அவளுடைய கணவன் குமரன், அம்மாவின் மருத்துவச் செலவுகள் இந்த மாதம் இல்லாமல் இருந்தும் செலவு தொகை குறையவில்லையே என்று தலையைப் பிய்த்துக் கொண்டான். என்றாலும் அதற்கான காரணத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கெளரியிடம் கேட்டான். அதற்கு அவள் சொன்னாள்:
"" ஒவ்வொரு மாத பட்ஜெட்டிலும் உங்க அம்மாவின் மருத்துவ செலவுக்கு என ஐநூறு ரூபாய் போடுவேன். இப்ப அதை உங்க அம்மாவின் நினைவாக, ஒவ்வொரு மாதமும் முதியோர் இல்லத்துக்கு நன்கொடையாகத் தரப் போகிறேன்''

கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்.எம்.எஸ்.

வார்த்தைகள் வழிகள் ஆகட்டும்...
வலிகள் ஆக வேண்டாம்.

இரா.வசந்தராசன்,
கல்லாவி.

அப்படீங்களா!


""வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் என்னால் இருக்க முடியாது'' என்று பெருமையாக உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறீர்களா?
"இனிமேல் உங்களால் ஏசி இல்லாமலும் கூட இருக்க முடியும்' என்று சொல்லும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது, ஒரு பெயிண்ட். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள பர்தியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பெயிண்ட்டைக் கண்டு
பிடித்திருக்கிறார்கள்.
"அல்ட்ரா ஒயிட்' என்று சொல்லப்படக் கூடிய இந்தப் பெயிண்ட் வெண்மையிலும் வெண்மையானது.
இந்த "அல்ட்ரா ஒயிட்' பெயிண்டின் மேல் படும் 98.1 சதவீதம் சூரிய வெளிச்சத்தை அது பிரதிபலித்துவிடுகிறது. சாதாரணமான வெள்ளை பெயிண்ட் அதன் மேல் படும் சூரிய வெளிச்சத்தின் 10 முதல் 20 சதவீதம் வரை உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த அல்ட்ரா ஒயிட் பெயிண்ட்டோ, வெறும் 1.9 சதவீதம் சூரிய வெளிச்சத்தை மட்டுமே உள்ளிழுத்துக் கொள்கிறது.
இதனால் இந்த அல்ட்ரா ஒயிட் பெயிண்ட்டை ஒரு வீட்டின் சுவரில், மேற்கூரையில் அடித்துவிட்டால், அந்த வீட்டுக்கு ஏசி தேவையில்லை. 1000 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டின் மேற்கூரையில் இந்த பெயிண்ட்டை அடித்துவிட்டால், அது 10 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தி ஏசி இயங்கினால் ஒரு வீட்டுக்குத் தரும் குளிர்ச்சியை விட அதிக குளிர்ச்சியை தந்துவிடுகிறது என்று
இந்த பர்தியூ பல்கலைக்
கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 13 டிகிரி சென்டிகிரேடு வெப்பமே இந்த பெயிண்ட் பூசப்பட்ட கட்டடத்துக்குள் இருக்குமாம்!
இந்த அல்ட்ரா ஒயிட் பெயிண்ட்டை பேரியம் சல்பேட் என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தி செய்கிறார்கள்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com