பாடகராக... உடல் நலம்!

இந்திய பேச்சு மற்றும் கேட்பியல் கழகம் (இந்தியன் ஸ்பீச் அண்ட் ஹியரிங் அசோசியேஷன்) சமுதாயத்திற்கு பேச்சு மற்றும் கேட்பியல் பற்றியும், தகவல் பரிமாற்றம் சம்பந்தபட்ட கோளாறுகள் பற்றியும் விழிப்புணர்வை 
பாடகராக... உடல் நலம்!


இந்திய பேச்சு மற்றும் கேட்பியல் கழகம் (இந்தியன் ஸ்பீச் அண்ட் ஹியரிங் அசோசியேஷன்) சமுதாயத்திற்கு பேச்சு மற்றும் கேட்பியல் பற்றியும், தகவல் பரிமாற்றம் சம்பந்தபட்ட கோளாறுகள் பற்றியும் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள்.

இதில் பேச்சு, வாய்ப்பாட்டு, மற்றும் குரல் பற்றிய நமது சந்தேகங்களுக்கு ஸ்ரீ இராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேச்சு மொழி கேட்பியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் பிரகாஷ் பூமிநாதன் ஒலி பற்றி விளக்குகிறார்:

"'குரல் உன்னதமானது. இது இல்லை என்றால் கண்டிப்பாக உடம்பில் ஓர் உறுப்பு இல்லாதது போல இருக்கும். இதை நாங்கள் வோக்கல் ஹெல்த் என்று கூறுவோம். இது இரண்டு வகைப்படும். ஒன்று எந்த இடத்திலிருந்து சப்தம் வருகிறது என்று முதலில் நாம் உணர வேண்டும். அதை ஆங்கிலத்தில் சிஸ்டம் என்று சொல்வார்கள்.

இரண்டாவது எதன் வழியாக இந்த ஓசை வருகிறது என்று பார்க்கலாம். ஓசை வாய் வழியாக வருகிறது என்று சொல்வார்கள்.

மருத்துவர்கள் தொண்டை குழியில் இருந்து வருகிறது என்றும், அதற்குரிய மருத்துவப் பெயரையும் சொல்வார்கள்.

அடுத்து யார் பாடுகிறார்கள் அல்லது பேசுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த மனிதர் எவ்வளவு உணர்ச்சியோடு மேடையில் பேசுகிறார் அல்லது பாடுகிறார் என்று பார்க்க வேண்டும்.

அதில் அவர் கற்ற இசை, மேடையில் அவர் காட்டும் முக பாவங்கள், குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் எல்லாம் அடங்கும்.

தொண்டைக் குழியில் இருந்து ஓசை வருகிறது என்றால், அதை விவரிக்க நான் ஓர் உதாரணத்தை இங்கு சொல்கிறேன். ஒரு கார் இருக்கிறது; அதற்கு மூன்று முக்கிய பாகங்கள் இருக்கின்றன. காரை நாம் வாங்க முடிவு செய்திருந்தால், முதலில் இன்ஜினைப் பார்போம். இங்கே அதை நாம் ரெஸ்பிரேட்டரி சிஸ்டம் என்று சொல்கிறோம். அடுத்து ட்ரான்ஸ்மிஷன் யூனிட் . இதை தொண்டைக் குழி அல்லது வாய்ஸ் பாக்ஸ் என்றும் சொல்லலாம். ஒரு மனிதனின் உடம்பில் இது ஒரு சென்டிமீட்டர் அளவில்தான் இருக்கும். ஆனால் இது தரும் ஓசையோ ஆணிடமிருந்து ஒரு நொடிக்கு 130 ஒலி அலைகளாக வரும். பெண்களாக இருந்தால், அதே ஒரு நொடியில் 230 ஒலி அலைகளாக இருக்கும். இதே ஒரு பாடகராக இருந்தால் ஆயிரக்கணக்கான ஒலிஅலைகளாக மாறி விடும்.

பாடகர்களுக்கு நான் தரும் டிப்ஸ் இது தான். உங்கள் குரலைப் பாதுகாத்துக் கொள்ள நான்கு விதமாக உழைக்க வேண்டும். முதலில் மூச்சுப் பயிற்சி முக்கியம். அதுவும் எந்த விதத்தில், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று வரையறைகள் உள்ளன. உட்கார்ந்து பாட வேண்டும் என்றால், நீங்கள் பதினாறு வயதில் உட்கார்ந்து பாடியதற்கும், 60 வயதில் உட்கார்ந்து பாடுவதற்கும் வித்தியாசம் இருக்கும்.

எனவே, உங்கள் தொண்டையைப் பாதுகாத்து கொள்ள, நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொண்டையை எந்நேரமும் தண்ணீரில் மூழ்கடிக்க, மூழ்கடிக்க அது உங்கள் சொல் பேச்சு கேட்கும். அதைவிட முக்கியமானது, உங்கள் ஜீரண சக்தியைச் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், நீங்கள் சாப்பிடும் எந்த ஓர் உணவும், வயிற்றில் போய் பல்வேறு அமிலங்களோடு, கலந்து ஜீரணமாக வேண்டும். அப்படி இல்லை என்றால் வயிற்றில் இருந்து வெளியேறும், பல்வேறு அமிலங்கள் தொண்டையை அடைந்து, குரலைப் பாழ்படுத்திவிடும். அதனால் நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் உடம்பிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

உங்கள் தொண்டைக் குழி, காற்று ஒன்றைத் தவிர வேறெதையும் ஏற்று கொள்ளாது. ஆதலால் நீங்கள் பாடகராக விரும்பினால் உடலைப் பேணிக் காக்கவேண்டும்'' என்றார் டாக்டர் பிரகாஷ் பூமிநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com