திரைக்கதிர்

2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம், "பாதாய் ஹோ'.  நகைச்சுவை பாணி திரை அமைப்பில் உருவான இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது.
திரைக்கதிர்


2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான திரைப்படம், "பாதாய் ஹோ'. நகைச்சுவை பாணி திரை அமைப்பில் உருவான இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது. இப்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாராகி விட்டார் ஆர்.ஜே.பாலாஜி. இதற்கு "வீட்ல விசேஷங்க' என்று தலைப்பு வைக்க முடிவெடுத்துள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------

நடிகரும், இயக்குநருமான நந்தா பெரியசாமி சிறிய இடைவெளிக்குப் பின் இயக்கி வரும் படம் " ஆனந்தம் விளையாடும் வீடு'. கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் முழுக்க முழுக்க குடும்பப் படமாகத் தயாராகி வரும் இப்படத்துக்கு பால பரணி ஒளிப்பதிவு
செய்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------


தமிழில் "மிருகம்', "யாகாவாராயினும் நாகாக்க', "மரகத நாணயம்' போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகிறது ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி. சுசீந்திரன் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் "சிவுடு' படத்தில்தான் நடிக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------


யாஷிகா ஆனந்த் தற்போது விடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அதில், துபாய் பார்க்கிலிருக்கும் ஒட்டகம் மற்றும் கரடிக்கு உணவு கொடுப்பது, சிங்கத்தைக் கயிறு கட்டி இழுப்பது, பாம்பைத் தோளில் தூக்குவது என்று விலங்குகளுடன் கொஞ்சி விளையாடும் விடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------


சிவகார்த்திகேயன் நடிக்கும் "டாக்டர்' படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. தற்போது "அரண்மனை -3' படத்தையும் ரம்ஜானுக்கு வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார் சுந்தர்.சி. இதனால் போட்டியில்லாமல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின்" டாக்டர்', "அரண்மனை-3'யுடன் மோதப் போகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------


சிம்பு கதாநாயகனாக நடித்து, பெரிய அளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று "மன்மதன்'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------


"ஜகமே தந்திரம்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். விக்ரமின் 60-ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாபி சிம்ஹாவும் தற்போது இணைந்துள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------


ராமாயணக் கதையாக உருவாகும் படம் ஆதி புருஷ். இதில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைப் அலிகான் நடிக்கிறார். சீதை கேரக்டரில் பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் ஒப்பந்தமாகிவுள்ளார். லட்சுமணன் வேடத்தில் சன்னி சிங் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பது தனக்கு மிகப் பெரிய பெருமை
என்கிறார் கிரித்தி சனோன்.

----------------------------------------------------------------------------------------------------------------


முதன்முதலாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் "அசுரன்' புகழ் மஞ்சு வாரியர். மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தை அறிமுக
இயக்குநரான கல்பேஷ் என்பவர் இயக்கவுள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------


பிரபல டிவியில் "வணக்கம் தமிழா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பூஜிதா. தற்போது இவர் ஜோதி எனும் த்ரில்லர் படத்தில் டாக்டராகவும், தமன்னா நடிக்கும் "நவம்பர் ஸ்டோரி' எனும் வெப் சீரிஸில் மருத்துவக் கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளார்.

----------------------------------------------------------------------------------------------------------------


"ஆடுகளம்' படத்தில் தனுஷின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். இவர் முதன்முறையாக "ஜகா' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நடித்த " காக்டெய்ல்' படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இயக்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com