30 அடி நீளம்... 400 மைல் வேகம்... இருசக்கர வாகனம்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியுமா? "விமானத்தில் தானே' என்று கேட்கிறீர்களா?   இல்லை...  இருசக்கர வாகனத்தில். 
30 அடி நீளம்... 400 மைல் வேகம்... இருசக்கர வாகனம்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு மணி நேரத்தில் செல்ல முடியுமா?

"விமானத்தில் தானே' என்று கேட்கிறீர்களா? இல்லை... இருசக்கர வாகனத்தில்.

மணிக்கு 400 மைல் (643.74 கி.மீ.) வேகத்தில் செல்லக் கூடிய இருசக்கர வாகனம் ஒன்று இப்போது பிரிட்டனில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இருசக்கர வாகனத்தை உருவாக்கியிருப்பவர் அலெக்ஸ் மாக்ஃபட்சீன் என்ற 77 வயது பொறியாளர். அவர் ஏற்கெனவே பல பைக், கார் பந்தயங்களில் கலந்து கொண்டவர். அவர் உருவாக்கியுள்ள அந்த இரு சக்கர வாகனத்தில் சென்றால் 1 மணி நேரத்துக்கும் முன்னதாகவே சென்னையிலிருந்து திருநெல்வேலியை அடைந்துவிடலாம்.

இந்த இரு சக்கர வாகனம் 30 அடி நீளம் கொண்டது. இதன் பெயர் ஸ்ட்ரீம்லைனர். வழக்கமான இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜின் இதில் பொருத்தப்படவில்லை. பிரிட்டிஷ் ராணுவத்தாலும் கடற்படையாலும் பயன்படுத்தப்படும் "வெஸ்ட்லேண்ட் லிங்க்ஸ்' என்ற ஹெலிகாப்டரில் உள்ள "ரோல்ஸ் ராய்ஸ்' என்ற என்ஜின்தான், இந்த இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 1200 சாப்ட் ஹார்ஸ்பவர் திறன் உள்ளது.

022 - ஆம் ஆண்டு பொலிவியாவின் யுயூனி சால்ட் ஃபிளாட்டில் நடைபெறவுள்ள பந்தயத்தில் இந்தஇருசக்கர வாகனம் பங்கேற்க உள்ளது.

இந்த இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு கய் மார்ட்டீன் என்ற பிரிட்டிஷ் வீரர் தயாராக இருக்கிறார்.

1981 -ஆம் ஆண்டு பிறந்த கய் மார்ட்டீன் மோட்டார் பைக் பந்தய வீரராவார். தனது 18 வயதில் மோட்டார் பைக் பந்தயங்களில் ஈடுபடத் தொடங்கிய அவர், பலவிதமான மோட்டார் பந்தயக் குழுக்களில் பங்கேற்றவர். 2015 -இல் இவர் பங்கேற்ற மோட்டார் பைக் பந்தயத்தின்போது கடுமையான விபத்துக்குள்ளானார். முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் 2017 - இல் இருந்து எந்தவிதமான மோட்டார் பைக் பந்தயங்களிலும் இவர் கலந்து கொள்ளவில்லை.

அதற்குப் பிறகு விரைவு கார் பந்தயங்களில் அவர் கலந்து கொண்டார்.

இதற்கிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு கொண்டார். கய் மார்ட்டீன் மீண்டும் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட இப்போது முன் வந்திருக்கிறார்.

பொலிவியாவில் நடைபெற உள்ள இருசக்கர வாகனப் பந்தயத்தில் பங்கேற்க உள்ள கய் மார்ட்டீனின் முன் ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது.

மணிக்கு 376.3 மைல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று ஏற்கெனவே சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்க வீரரான ராக்கி ராபின்சன். அதற்கு அவர் மணிக்கு 394 மைல் வேகத்தில் செல்லும் "ட்வீன் சுசூகி' என்ற வாகனத்தைப் பயன்படுத்தினார். அவருடைய சாதனையை முறியடிப்பதுதான் கய் மார்ட்டீன் முன் உள்ள மிகப் பெரிய சவால்.

அதற்கு மணிக்கு 400 மைல் வேகத்தில் செல்லும் இந்த ஸ்ட்ரீம்லைனர்தான் பொருத்தமானது என்கிறார் கய் மார்ட்டீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com